Thursday 5 June 2014

நம்மைச் சுற்றி. . . . . செய்திகள் (05-06-2014)

(05-06-2014) மாலை, IST- 05.30 மணி,நிலவரப்படி,

வல்லநாடு அருகே இரு தரப்பினரிடையே மோதல் 3பேருக்கு அரிவாள் வெட்டு - பதட்டம் போலீஸ் குவிப்பு

வல்லநாடு, 05-06-2014,
வல்லநாடு அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மண‌க்கரை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை கோவில் கொடை விழா நடந்தது. அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு பிரிவைச் சேர்ந்த சண்முகம் மகன் பாலு (26) என்பவரது வீட்டிற்கு போய், அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் முருகன் மகன் மணிகண்டன் (25), சுடலைமணி மகன் செந்தில் (25), முனியசாமி மகன் குமார் (25) ஆகியோர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.அதற்கு பாலு, மது அருந்துவதற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என்று மறுத்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த 3 இளைஞர்களும் சேர்ந்து பாலுவை சரமாரியாக தாக்கினார்களாம். இதுகுறித்து தகவலறிந்த முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை நடத்தினர். இரவு நேரம் என்பதால், நாளை காலை இரு தரப்பையும் காவல் நிலையத்திற்கு வருமாறு சொல்லிவிட்டு சென்று விட்டனர்.
இந்நிலையில், இன்று மாலை, பாலு, தனது நண்பர்களிடம் போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பாலு மற்றும் அவரது நண்பர்கள் 20பேர் கொண்ட கும்பல் வேறொரு பிரிவைச் சேர்ந்த குடியிருப்பு பகுதிகளுக்கு கத்தி, அரிவாள், கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சென்று 10க்கும் மேற்பட்ட வீடுகளை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த 8 பைக்குகளையும் அடித்து நொறுக்கினர்.இதனை தடுத்த, முனியசாமி மகன் சுரேஷ்குமார் (35), கந்தன் மகன் முருகன் (35), பார்வதிநாதன் மகன் நடராஜன் (55) ஆகியோருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. சம்பவம் குறித்து தகவலறிந்த முறப்பநாடு போலீசார் 3 பேரையும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எஸ்.பி.துரை சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை நடத்தி மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.இரு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள மோதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலியில் இருந்து ஒளி ஓவியர் அம்பி

No comments:

Post a Comment