Wednesday 4 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (05-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (05-06-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

ஒரே ஒரு எம்.பி., பதவியேற்புடன் 16வது லோக்சபா தொடங்கியது

புதுடெல்லி, 05-06-2014,

பதினாறாவது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததும், சபை ஒத்தி வைக்கப்பட்டது.இதனால், நேற்று நடக்க இருந்த, புதிய எம்.பி.,க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக, லோக்சபாவின் தற்காலிக சபாநாயகராக, காங்கிரசைச் சேர்ந்த கமல்நாத் பதவியேற்றார். அதனால், ஒரே ஒரு எம்.பி., பதவியேற்புடன் லோக்சபா துவங்கியது. அதனால், 24 மணி நேரத்திற்கு லோக்சபா எம்.பி.,யாக கமல்நாத் மட்டுமே இருப்பார்.

கடந்த, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், நாடு முழுவதும், ஒன்பது கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தல் முடிவுகள், மே, 16ம் தேதி வெளியாகின. இதில், பா.ஜ., 282 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது.மே, 26ல், நாட்டின், 15வது பிரதமராக, நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் அமைச்சர்கள், 45 பேரும் பதவியேற்றனர்.
                                                                                               மேலும் , . . 

கால்வாயில் விழுந்த சிறுமியை 3 நாளாகியும் மீட்க முடியாத பரிதாபம்


வேலூர், 05-06-2014,
வேலூரில் கழிவுநீர் கால்வாயில் சிறுமி அடித்துச்செல்லப்பட்டு 3 நாளாகியும் மீட்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது. மீட்பு குழுவினர் சிறுமியின் உடலை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கால்வாய்

ஜார்க்கண்ட் மாநிலம் கிரீடி மாவட்டம் மகாப்பூரை சேர்ந்த இந்திரஜித் முகர்ஜி என்பவரின் மகள் பிரியங்கா (வயது 13). இவர் அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தாள்.

வேலூரில் தனது இளையமகள் சிகிச்சைக்காக வந்திருந்த இந்திரஜித் தனது மூத்த மகள் பிரியங்காவையும் அழைத்து வந்திருந்தார். இங்குள்ள ஒரு விடுதியில் அவர்கள் தங்கி இருக்கும் போது அங்குள்ள உறவினர் அமீத், அவரது மனைவி சீமா ஆகியோரை சந்தித்தனர்.
                                                                                                        மேலும், . . .
நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் நாங்கள் எங்களது வேலையை பார்க்கிறோம் - முலாயம் சிங் யாதவ்

புதுடில்லி, 05-06-2014,

உ.பி.,யில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக மீடியாக்களிடம் கருத்து தெரிவித்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். நாங்கள் எங்களது வேலையை பார்க்கிறோம் என கூறியுள்ளார்

உ.பி., மாநிலத்தில் படுவான் கிராமத்தில் இரண்டு சிறுமிகள் கற்பழித்து தூக்கில் தொங்கவிடப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஒரு சில நாட்களில் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மாநிலத்தில் ஆட்சி செய்யும் சமாஜ்வாடி அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. நாங்கள் தலையிட வேண்டியிருக்கும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியாமல் திணறி வருவதால், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் முதல்வர் அகிலேசும், அவரது குடும்பத்தினரும் திணறி வருகின்றனர்.
                                                                                                                               மேலும், . . . 

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர் ரூ.9 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது ஏற்கனவே ரூ.12 லட்சம் புழக்கத்தில் விட்டதாக திடுக்கிடும் தகவல்


சென்னை, 05-06-2014,
கொல்கத்தாவில் இருந்து ரூ.9 லட்சம் கள்ள நோட்டுகளை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே ரூ.12.5 லட்சம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக திடுக்கிடும் தகவலும் கிடைத்தது.

கள்ள நோட்டு புழக்கம்

சென்னையில் கடந்த சில தினங்களாக கள்ளநோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் இருந்ததை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் தலைமையில் துணை சூப்பிரண்டு ரத்தினமணி கொண்ட தனிப்படையினர் மாறு வேடங்களில் கண்காணித்து வந்தனர்.
                                                                                                         மேலும், . . . .

No comments:

Post a Comment