Sunday 26 April 2015

இன்றைய முக்கிய செய்திகள் (26-04-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (26-04-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

நேபாள நிலநடுக்கம் பலியானோர் எண்ணிக்கை 1,805 ஆக உயர்வு இந்தியாவில் 51 பேர் உயிரிழப்பு

காட்மண்டு/புதுடெல்லி, ஏப்ரல் 26,2015,
நேபாளத்தில் நில நடுக்கத்தின் பிடியில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1,805 ஆக உயர்ந்தது. இந்தியாவில் நிலநடுக்கத்தில் 51 பேர் உயிரிழிந்தனர். நேபாளம் மற்றும் இந்தியாவில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தியா முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது.
அழகான நேபாளம் நாட்டை நிலநடுக்கம் என்ற பெயரில் இயற்கை சீற்றம், சின்னாபின்னப்படுத்திஉள்ளது. நேபாளத்தில் நேற்று 7.9 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் காட்மாண்டு தொடங்கி போக்ரா, லாம்ஜங், கீர்த்தி நகர் என அந்த நாடு முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி விட்டது. எங்கு பார்த்தாலும் வீடுகளும், அலுவலகங்களும், வணிக நிறுவனங்களும், கோவில்களும் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தன. நில நடுக்கத்தால் மக்கள் நெருக்கம் மிகுந்த காட்மாண்டு பள்ளத்தாக்கு பகுதி உருக்குலைந்து விட்டது.
இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் கை, கால்கள் என உறுப்புகள் சேதம் அடைந்த நிலையில், காட்மாண்டு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயம் அடைந்தவர்களுக்கு டாக்டர்கள், வீதிகளிலேயே திறந்தவெளி மருத்துவ முகாம்களை அமைத்து சிகிச்சை அளிக்கின்றனர்.
நிலநடுக்கத்தின் பிடியில் சிக்கி 1500 பேர் பலியாகினர் என்று தகவல்கள் வெளியாகின.
                                                                                                       மேலும்....

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் பிரதமரிடம் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வலியுறுத்தல்

புதுடெல்லி, ஏப்ரல் 26,2015,
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்று பிரதமர் மோடியிடம், முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வலியுறுத்தினார்.
பிரதமருடன் சந்திப்பு
‘நிதி ஆயோக்’ ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்திருந்த தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை அவருடைய இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்.
சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் கடிதம் ஒன்றை பிரதமரிடம் அவர் அளித்தார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:–
                                                                                                            மேலும்....

ஆபாச படம் எடுத்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற டாக்டர் பிரகாஷ் விடுதலை ஐகோர்ட்டு தீர்ப்பு

சென்னை, ஏப்ரல் 26,2015,
பெண்களை கட்டாயப்படுத்தி ஆபாச படம் எடுத்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் பிரகாஷ் 13 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால், சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலமாக கருதி அவரை விடுதலை செய்வதாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து டாக்டர் பிரகாஷ் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
ஆபாச படம்
பிரபல மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ் என்றால் தமிழகத்தில் யாருக்கும் தெரியாது. ஆனால், ‘செக்ஸ் டாக்டர் பிரகாஷ்’ என்றால், தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் நன்கு தெரியும். அந்த அளவுக்கு டாக்டர் பிரகாஷ் பிரபலமானவர்.
இவர், இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்களை வைத்து ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார் என்று 2001-ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. புதுச்சேரியை சேர்ந்த கணேசன் என்பவர் வடபழனியில் அவரது மாமா வீட்டில் தங்கியிருந்து, டாக்டர் பிரகாஷ் நடத்திய ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார். இவர், வடபழனி போலீசில், தன்னை பல பெண்களுடன் கட்டாயப்படுத்தி உறவுக் கொள்ளச் சொல்லி கொடுமைப்படுத்துவதாக டாக்டர் பிரகாசுக்கு எதிராக புகார் செய்தார். இதுகுறித்து அப்போதைய இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து, 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி டாக்டர் பிரகாஷை கைது செய்தார்.
தம்பி மீது வழக்கு
இதையடுத்து டாக்டர் பிரகாசின் கூட்டாளிகளான சரவணன், விஜயன், நிக்சன், ஆசீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
                                                                                                        மேலும்....

‘2 ஆண்டுகளில் மோனோ ரெயில் ஓடும் என்று காதில் பூ சுற்றப்பார்க்கிறார்கள்’ கருணாநிதி தாக்கு

சென்னை, ஏப்ரல் 26,2015,
2ஆண்டுகளில் மோனோ ரெயில் ஓடும் என்று காதில் பூ சுற்றப்பார்க்கிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மோனோ ரெயில்
2011-ம் ஆண்டில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அ.தி.மு.க. அரசு 3-6-2011 அன்று படித்த கவர்னர் உரையில் “சென்னை மாநகருக்கு தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட “மோனோ” ரெயில் திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக 111 கிலோ மீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக 300 கிலோ மீட்டர் வரை விரிவுபடுத்தப்படும். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க “மோனோ ரெயில்” திட்டம் செயல்படுத்த உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தது.
அதற்கு பிறகு ஜெயலலிதா வழிகாட்டுதல் படி; 4-8-2011 அன்று படித்த நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைய முதல்-அமைச்சர், “மோனோ ரெயில்” திட்டத்தை விரைவில் தொடங்குவதற்கு தேவையான நிதி ஆதாரம் இந்த ஆண்டிலேயே கண்டறியப்படும் என்றார். கண்டறிந்தார்களா? என்ன ஆயிற்று அந்தத்திட்டம்?
                                                                                                         மேலும்....

No comments:

Post a Comment