Wednesday 25 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (25-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (25-03-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

இணையதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் சட்டம் ரத்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

சமூக வலைத்தளங்களில் ஆட்சேப கரமான கருத்துகளை வெளியிடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ய வழிவகுக்கும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
புதுடெல்லி, மார்ச்.25-
கடந்த 2012-ம் ஆண்டு சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணத்தை தொடர்ந்து மும்பை நகரில் கடையடைப்பு நடத்தப்பட்டது.
அதை விமர்சித்து ‘பேஸ்புக்’ பக்கங்களில் எழுதியதாக மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஷகீன் தாதா மற்றும் ரீனு சீனிவாசன் ஆகிய இரு பெண்கள் மராட்டிய போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
                                                                                                                    மேலும்....

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் வரிச்சலுகைகள் இருக்க வாய்ப்பு

சென்னை, மார்ச்.25-
2015-16-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழக சட்டசபையில் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பட்ஜெட்
ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு, கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. 2011-12-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்யப்பட்டது. 2012-13, 2013-14-ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்களும் அந்தந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன.
2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த 4 பட்ஜெட்டுகளையும் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இன்று பட்ஜெட்
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது.
                                                                                                                               மேலும்....

கட்சியில் சேர்ந்த 5 மாதத்தில் பதவி: அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக நடிகை குஷ்பு நியமனம் சோனியா காந்தி அறிவிப்பு

சென்னை, மார்ச்.25-
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 5 மாதத்தில் நடிகை குஷ்புவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு
தி.மு.க.வில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விலகிய நடிகை குஷ்பு, டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பிறகு, டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் நடிகை குஷ்பு கலந்துகொண்டார்.
                                                                                                         மேலும்....

எம்.பி.பி.எஸ். என்பதற்கு அர்த்தமே தெரியாமல் 5 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கொடுமை கைதான போலி டாக்டர் தம்பதி பற்றி திடுக்கிடும் தகவல்கள்

சென்னை, மார்ச்.25-
சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள போலி டாக்டர் தம்பதி பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்.பி.பி.எஸ். என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் 5 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
போலி டாக்டர் தம்பதி
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த போலி டாக்டர் தம்பதி ஆனந்தகுமார், நிர்மலா சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலி டாக்டர் வேடம் போட்டதோடு, சென்னை மாநகராட்சி கமிஷனர் தங்களது குடும்ப நண்பர் என்றும், அவர் மூலம் மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக ஏராளமான பேரிடம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி உள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., எம்.டி. என்ற படிப்புகள் பற்றி இருவரிடமும் போலீசார் கேட்டபோது, அந்த வார்த்தைகளின் அர்த்தம் கூட இவர்களுக்கு தெரியவில்லை.
                                                                                            மேலும்....
 

No comments:

Post a Comment