Friday 27 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (28-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (28-03-2015) காலை, IST- 08.30 மணி, நிலவரப்படி,

எதிர்க்கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டம் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்- ரெயில்கள் ஓடும் என்று அறிவிப்பு

சென்னை, மார்ச்.28-
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றன. போலீஸ் பாதுகாப்புடன் பஸ்-ரெயில்கள் வழக்கம்போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பு போராட்டம்
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிதாக அணைகளை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பஸ்-ரெயில்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஓடும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
                                                                                                         மேலும்....

முதுபெரும் பா.ஜனதா தலைவருக்கு மத்திய அரசு கவுரவம் 91 வயது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி வழங்கினார்

முதுபெரும் பாரதீய ஜனதா தலைவரும், முன்னாள் பிரதமருமான 91 வயது வாஜ்பாய்க்கு நேற்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்கு நேரில் சென்று அவரிடம் விருதை வழங்கினார்.
புதுடெல்லி, மார்ச்.28-
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ‘பாரத ரத்னா’ விருதினை வழங்குவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு, அவரது பிறந்த நாளின்போது அறிவித்தது.
91 வயது தலைவர்
அப்போது அவரது பிறந்த நாளை நல்லாட்சி தினமாகவும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு அறிவித்து பெருமை சேர்த்தது.
91 வயதாகும் வாஜ்பாய், 3 முறை நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்தவர்;
                                                                                                                மேலும்....
தமிழக சட்டசபை இன்று நடைபெறாது கூட்டத்தை ஒத்திவைத்து அறிவிப்பு

சென்னை, மார்ச்.28-
இன்று நடக்க இருந்த தமிழக சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை பேரவைச் செயலகம் வெளியிட்டது.
இன்று முழு அடைப்பு
கர்நாடக அரசின் மேகதாது திட்டம் உள்பட தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தலையிட்டு தடுக்கக் கோரி தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
                                                                                          மேலும்....

தற்கொலை செய்து கொண்ட வேளாண் அதிகாரியின் குடும்பத்தினர் நெல்லையில் வீட்டை காலி செய்தனர் அரசியல்வாதிகள் மிரட்டலால் சென்னையில் குடியேற முடிவு

நெல்லை, மார்ச்.28-
தற்கொலை செய்துகொண்ட வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினர் நெல்லையில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறினார்கள். அரசியல்வாதிகள் மிரட்டி வருவதால் சென்னையில் குடியேற இருப்பதாக கூறினார்கள்.
அதிகாரி தற்கொலை
நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி கடந்த மாதம் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண் துறையில் 7 டிரைவர்களை பணி நியமனம் செய்ததில், அரசியல் பிரமுகர்களின் நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
                                                                                                       மேலும்....

No comments:

Post a Comment