Monday 9 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (09-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (09-03-2015) மாலை, IST- 02.30 மணி, நிலவரப்படி,

தேசப்பற்று பற்றி எங்களுக்கு பாடம் நடத்தாதீர்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மோடி பதில்

புதுடெல்லி, மார்ச், 09–03-2015,
காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத தலைரான மசரத் ஆலம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய பல உறுப்பினர்கள் பலர், நாட்டின் பாதுகாப்பு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டிற்கு எதிரான நபர் விடுதலை செய்யப்பட்டதாகவும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். எனவே இது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து ஆலம் விடுதலை குறித்து பிரதமர் மோடி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
நாட்டின் ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை.
                                                                                                 மேலும்....

'என்னை கத்தியால் குத்திவிட்டான், டார்லிங்' கடைசியாக கணவரிடம் பேசிய இந்திய என்ஜினீயர்

மெல்போர்ன், மார்ச், 09–03-2015,
சிட்னியில் இந்திய பெண் என்ஜினீயர் பிரபா தனது கணவரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தபோது, கைத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். செல்போனில் பேசிக் கொண்டு இருந்த பிரபா கடைசியாக 'என்னை கத்தியால் குத்திவிட்டான், டார்லிங்' என கணவரிடம் தெரித்து உள்ளார்.
பெங்களூருவை சேர்ந்தவர் பிரபா அருண் குமார் (வயது 41). திருமணமாகி விட்டது. கணவர் அருண்குமார்.
                                                                                                    மேலும்....

தமிழக மீனவர்கள் சுடப்படுவதை நியாயப்படுத்துவதா? ரனில் விக்ரமசிங்கேவுக்கு கருணாநிதி கண்டனம்

சென்னை, மார்ச். 09–03-2015,
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
இலங்கையில் தமிழர்கள் வாழ்வை சூறையாடிய ராஜபக்சேவுக்கு வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு தோல்வி ஏற்பட்டு, அங்கே புதிய அதிபராக சிறிசேனா பொறுப்புக்கு வந்த பிறகும், தமிழர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெற முடியுமா என்பது கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது.
“மழை விட்டாலும் தூறல் நிற்கவில்லை” என்பதைப் போல வருகின்ற செய்திகள் மகிழ்ச்சியைத் தரவில்லை. இலங்கையின் புதிய அதிபர் அண்மையில் இந்தியாவுக்கு வந்த போது, தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டு தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது, ஆனாலும் அதிலும் வெற்றி கிடைக்கவில்லை. இலங்கை அதிபரின் வருகையையொட்டி, இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் படகுகள் விடுவிக்கப் படப்போவதாக செய்தி வந்தது.
அந்தப் படகுகள் வந்து சேருவதற்குள்ளாகவே, மீண்டும் மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதுமான நிலைமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
நிலைமை இவ்வாறிருக்க, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியோ,
                                                                                                          மேலும்....

உலக கோப்பை கால்இறுதிக்கு நுழையும் மற்ற அணிகள் எவை?

சென்னை, மார்ச். 09–03-2015,
உலககோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 14–ந்தேதி தொடங்கியது. இதில் 14 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துவிட்டன.
இதுவரை ‘ஏ’ பிரிவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா ஆகிய 3 அணிகளும் கால் இறுதிக்கு தகுதி பெற்று உள்ளன.
ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து (‘ஏ’ பிரிவு), ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (‘பி’ பிரிவு) ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேற்றப்பட்டன.
‘ஏ’ பிரிவில் இருந்து 2 அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து 3 அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெற வேண்டும்.
                                                                                               மேலும்....

No comments:

Post a Comment