Thursday 26 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (26-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (26-03-2015) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

நிலக்கரி சுரங்க வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டு பிறப்பித்த சம்மனை ரத்து செய்யக்கோரி மன்மோகன்சிங் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

புதுடெல்லி, மார்ச்.26-
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு வழக்கில் தனிக்கோர்ட்டு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சம்மன்
கடந்த 2005-ம் ஆண்டு, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நிலக்கரித் துறையின் பொறுப்பும் அவர் வசம் இருந்தது. இந்த காலகட்டத்தில் ஒடிசாவில் உள்ள தலபிரா-2 சுரங்கத்தில் இருந்து ண்டால்கோ என்னும் நிறுவனத்துக்கு நிலக்கரியை எடுக்க அனுமதி வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்ததாக சி.பி.ஐ. வழக்கு ஒன்றை பதிவு செய்தது.
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி பாரத் பராசர் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவராக, ஏப்ரல் 8-ந் தேதியன்று நேரடியாக ஆஜராகுமாறு கடந்த 11-ந் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.
                                                                                                               மேலும்....

தமிழக பட்ஜெட்

தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. ரூ.650 கோடிக்கு வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
சென்னை, மார்ச்.26-
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
பட்ஜெட் தாக்கல்
சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் காலை 9.56 மணிக்கு வந்தார்.
சபாநாயகர் ப.தனபால், ‘‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு’’ என்ற திருக்குறளை வாசித்து காலை 10 மணிக்கு சட்டசபை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர், 2015-2016-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை (வரவு- செலவு அறிக்கை) நிதி இலாகா
                                                                                                                 மேலும்....

திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது நடுரோட்டில் கார் கவிழ்ந்து சென்னை பெண் டாக்டர் பலி


விழுப்புரம், மார்ச்.26-
நடுரோட்டில் கார் கவிழ்ந்து, சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் பலியானார். திருமண வீட்டுக்கு சென்றுவிட்டு தோழிகளுடன் திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது.
பெண் டாக்டர்
காஞ்சீபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை சேர்ந்த சிவபிரகாசம் என்பவரின் மகள் பிரணவப்பிரியா (வயது 27). இவர் மதுராந்தகம் அருகே உள்ள சின்னகேளம்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் ஒரு காரில் பிரணவப்பிரியா தனது தோழிகள் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த டாக்டர் பிரீத்தி (23), நீலாங்கரையை சேர்ந்த டாக்டர் திருமேனி (24) ஆகியோருடன் புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். நேற்று காலை திருமண விழா முடிந்ததும் இவர்கள் 3 பேரும் புதுச்சேரியில் இருந்து அச்சிறுப்பாக்கத்திற்கு காரில் புறப்பட்டனர். காரை பிரணவப்பிரியா ஓட்டினார்.
கார் கவிழ்ந்து பலி
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மொளசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக பிரணவப்பிரியாவின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் கார் உருண்டபடி சாலையின் மறுபக்கத்திற்கு சென்று கவிழ்ந்தது.
இதில் டாக்டர் பிரணவப்பிரியா காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
                                                                                                          மேலும்....

கருணாநிதி மீது அன்பு, பாசம், மரியாதை வைத்திருக்கிறேன் தாம்பரத்தை தாண்டினால் ‘தாமரை’யை யாருக்கும் தெரியவில்லை குஷ்பு பேட்டி

சென்னை, மார்ச்.26-
தாம்பரத்தை தாண்டினால், ‘தாமரை’யை யாருக்கும் தெரியவில்லை. இதுதான் தமிழக பா.ஜ.க.வின் எழுச்சி என்றும், கருணாநிதி மீது அன்பு, பாசம், மரியாதை இன்னமும் வைத்திருக்கிறேன் என்றும் நடிகை குஷ்பு கூறினார்.
இளங்கோவன் ஒத்துழைப்பு
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின், தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘காங்கிரஸ் கட்சியில் நான் சேர்ந்ததில் இருந்து, எனக்கு தேசிய அளவில் பதவி கிடைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிகம் ஆசைப்பட்டார். தற்போது பதவி கிடைத்துவிட்டது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒத்துழைப்பு இல்லாமல் எனக்கு பதவி கிடைத்திருக்காது. அவருடைய ஒத்துழைப்பை என்னால் மறக்க முடியாது’ என்றார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு குஷ்பு அளித்த பதில்களும் வருமாறு:-
                                                                                                மேலும்....

No comments:

Post a Comment