Sunday 8 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (08-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (08-03-2015) மாலை, IST- 02.30 மணி, நிலவரப்படி,

பெண்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வருவோம்: பிரதமர் மோடி உறுதி

டெல்லி, மார்ச். 08–03-2015,
பெண்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய பெண்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்;
'வளர்ச்சிக்கான இந்திய திருநாட்டின் பயணத்தில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
                                                                                             மேலும்....

ரெயில் முன் பாய்ந்து தற்கொலை வேளாண் அதிகாரி மரணம் பற்றி போலீஸ் விசாரணை

நெல்லை, மார்ச். 08–03-2015,
பாளையங்கோட்டை பெருமாள்புரம் திருமால் நகரை சேர்ந்த வேளாண்மை எனஜினீயர் முத்துக்குமாரசாமி (57). கடந்த 20–ந்தேதி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லையில் என்ஜிஓ காலனியில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில் காலியாக இருந்த 5 பணியிடங்களை நிரப்புவதில் சென்னையில் இருந்து முத்துக்குமாரசாமிக்கு கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு அவர் உடன்படவில்லை என்றும் இதனால் நெருக்கடிகள் மேலும் அதிகரித்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாகவே முத்துக்குமாரசாமி மனமுடைந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினர், அவரது சாவுக்கு குடும்ப பிரச்சினை காரணம் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.
                                                                                                               மேலும்.... 

நிறுவனருமான வினோத் மேத்தா காலமானார் பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி, மார்ச். 08–03-2015,
மூத்த பத்திரிகையாளரும் அவுட்லுக் இண்டியாவின் நிறுவனருமான வினோத் மேத்தா இன்று தலைநகர் டெல்லியில் காலமானார்.
2ஜி ஊழலில் தொடர்புடைய ராடியா டேப்ஸை வெளிக்கொண்டு வந்தவரான வினோத் மேத்தா, இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிக்கப்படாத நிலையில் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் 1942 ஆம் ஆண்டு பிறந்தார்.
                                                                                                            மேலும்....

திமுக.வுடன் கருத்து வேறுபாடு திருமாவளவன் அதிமுக அணிக்கு மாறுவாரா?

சென்னை, மார்ச். 08–03-2015,
கடந்த 2006–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்தது.
அந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி தி.மு.க.வுக்கு கூட்டணியில் இணைந்தது.
அதன்பிறகு 2009–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலை தி.மு.க. அணியுடன் சேர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சந்தித்தது. இதில் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
2011–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போதும் தி.மு.க. கூட்டணியிலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்தது.
                                                                                                           மேலும்....

No comments:

Post a Comment