Wednesday 18 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (19-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (19-03-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

கர்நாடக மாநிலத்தில் மர்ம மரணம் அடைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெற்றோர் கண்ணீர் பேட்டி “சி.பி.ஐ. விசாரணை நடத்த மறுத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம்”


பெங்களூரு, மார்ச்.19-
ஐ.ஏ.எஸ். அதிகாரி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மறுத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம் என்று அவரது பெற்றோர் கூறினார்கள்.
நேர்மையான அதிகாரி
கர்நாடக மாநில அரசின் வணிகவரித்துறை கூடுதல் கமிஷனர் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவிகுமார், நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர்.
35 வயதான அதிகாரி ரவிகுமார், கடந்த திங்கட்கிழமை அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது பிணம் தூக்கில் தொங்கியது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சி.பி.ஐ. விசாரணை கோரி போராட்டம்
அந்த மாநில முதல்-மந்திரி சித்தராமையா, அதிகாரி ரவிகுமார் மரணம் குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார்.
                                                                                                         மேலும்....

நெல்லையில் வீடு புகுந்து 3 குழந்தைகளின் தாய் வெட்டிக்கொலை கள்ளக்காதலனுடன் ஓடியதால் கொன்றதாக சரண் அடைந்த கணவர் வாக்குமூலம்

நெல்லை, மார்ச்.19-
நெல்லையில் வீடு புகுந்து 3 குழந்தைகளின் தாயை அவரது கணவரே வெட்டிக்கொலை செய்தார். பின்னர் அரிவாளுடன் போலீசில் சரண் அடைந்த அவர் ‘தனது மனைவி கள்ளக்காதலுனுடன் ஓடியதால் ஏற்பட்ட அவமானத்தால் அவளை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
கள்ளக்காதல் விவகாரம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரையை சேர்ந்தவர் அன்பரசு (வயது 35). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். அவரது மனைவி பொன் ஈசுவரி(25). இவர்களுக்கு முத்து சரளா (7), முத்துமாரி (5), சீதாலட்சுமி (3) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
பொன் ஈசுவரி தனது கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு விட்டு பாளையங்கோட்டை அன்னை இந்திரா நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து விடுவார். இவ்வாறு அடிக்கடி அங்கு வரும்போது பொன் ஈசுவரிக்கும் அந்த பகுதியில் உள்ள ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
                                                                                                              மேலும்....

உடன்குடி மின் திட்டம் ரத்து குறித்து விசாரணை நடத்த தயாரா? தமிழக அரசுக்கு, கருணாநிதி கேள்வி

சென்னை, மார்ச்.19-
உடன்குடி மின் திட்டம் ரத்து குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு தயாரா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உடன்குடி மின்திட்டம்
தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் மத்திய அரசு நிறுவனமான பாரதமிகு மின் நிறுவனம் (பி.எச்.இ.எல்.) மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டுத்திட்டத்தின் கீழ் 8,362 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமும் அனுமதி பெற்று, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, 22-2-2009 அன்று “உடன்குடி பவர் கார்பரேஷன் லிமிடெட்” நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்று, அதன் பின்ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்திலே அமைந்தது.
அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், உடன்குடியில் பி.எச்.இ.எல். நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை முழுவதுமாக 2012-ம் ஆண்டு ரத்து செய்து விட்டு, தமிழக மின்வாரியம் மட்டும் தனித்தே அந்தத்திட்டத்தைத் தொடங்கப்போவதாகவும், 660 மெகாவாட்உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் அமைக்கப்படுமென்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 24-2-2012 அன்று அறிவித்தார்.
டெண்டர்
இதற்காக டெண்டர் விடும் பணிகள் 2013-ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டன.
                                                                                                          மேலும்....

தமிழக கடலோர பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது தீவிரவாதிகள் வேடத்தில் நுழைந்த 45 பேரை பிடித்தனர் சென்னை ரிசர்வ் வங்கியை தாக்க வந்த 10 பேரை விரட்டி அடித்தனர்


சென்னை, மார்ச்.19-
தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி போலீசார் முதல் முதலாக இணைந்து நடத்திய பாதுகாப்பு ஒத்திகை நேற்று தொடங்கியது. ஒத்திகையில் தீவிரவாதிகள் வேடத்தில் நுழைய முயன்ற 45 பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
தீவிரவாதிகள்ஊடுருவலை தடுக்க...
கடல் வழியாக வந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்திய பிறகு, இந்தியா முழுவதும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்திய கடலோர மாநிலங்களில் 6 மாதத்திற்கு ஒருமுறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. தீவிரவாதிகள் வேடத்தில் கமாண்டோ படை வீரர்கள் கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் ஊடுருவி வருவார்கள். அவர்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். இதுதான் பாதுகாப்பு ஒத்திகையின் முக்கிய அம்சமாகும்.
தமிழகத்திலும் 13 கடலோர மாவட்டங்களில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இதுவரை 9 முறை இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதுபோன்ற ஒரு ஒத்திகை தமிழகத்தில் நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த டிசம்பர் மாதம் நடக்க இருந்த பாதுகாப்பு ஒத்திகை தள்ளி போடப்பட்டது. தற்போது 10-வது முறையாக நேற்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் தமிழகத்தில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடந்து வருகிறது. இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு ஒத்திகை முடிவடைகிறது.
ஆந்திரா, புதுச்சேரி...
இந்த ஒத்திகைக்கு ஆபரேஷன் ஆம்லா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
                                                                                                              மேலும்....

No comments:

Post a Comment