Saturday 7 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (07-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (07-03-2015) மாலை, IST- 03.30 மணி, நிலவரப்படி,

இலங்கை பிரதமர் ரனிலுடன் சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தை தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு

கொழும்பு, மார்ச். 07–03-2015,
இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்து இருந்தார். அதில் ‘‘தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்தால் துப்பாக்கியால் சுடப்படுவார்கள்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.
‘‘என் வீட்டுக்குள் அத்துமீறி நுழைபவர்களை சுட்டுத்தள்ள எனக்கு சட்டம் அனுமதி வழங்கி இருக்கிறது’’ என்றும் மேற்கோள் காட்டி ரனில் விக்ரம சிங்கே கூறினார்.
தமிழக மீனவர்களை கடந்த காலங்களில் இலங்கை கடற்படை சுட்டு இருக்கலாம். சில அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டு உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. இப்போது சுடுவது இல்லை. கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தம். இந்தியாவுக்கு விட்டுத்தர மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
ரனில் விக்ரமசிங்கே தமிழக மீனவர்களையும், இந்தியாவையும் மிரட்டுவது போல் கூறியிருப்பதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள்
                                                                                                                          மேலும்....

பா.ம.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்த்து கொள்ளப்படுமா? அன்புமணி ராமதாஸ் பேட்டி

ஈரோடு, மார்ச். 07–03-2015,
ஈரோடு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் பவானி ரோட்டில் உள்ள ரவி மகாலில் இன்று நடந்தது. கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ம.க. இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த ஆண்டு பா.ம.க. பொதுக்குழு கூடி அ.தி.மு.க.– தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ம.க. தலைமை ஏற்கும் அணி வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் 2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்–அமைச்சர் வேட்பாளராக என்னை அறிவித்தனர். இதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பா.ம.க.வின் நிலைப்பாடு, கொள்கைகள், திட்டங்கள் குறித்து விளக்கி கூறி வருகிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பதை பற்றியும் கூறி வருகிறோம்.
                                                                                                   மேலும்....

நாளை மகளிர் தினம் தலைவர்கள் வாழ்த்து

சென்னை, மார்ச். 07–03-2015,
உலக மகளிர் தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
தமிழக கவர்னர் ரோசையா வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:–
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு எனது இதயபூர்வ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்கள் சமுதாயத்தின் முதுகெலும்பு, நாடு மற்றும் குடும்பத்தின் பல்வேறு நலன்களின் பலமாகவும் தூணாகவும் இருக்கிறார்கள்.
                                                                                                                  மேலும்....

சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீடு: அரசு வக்கீல் பவானிசிங் இறுதி வாதம் முடிவடைந்தது இந்த மாத இறுதியில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு

பெங்களூரு, மார்ச். 07–03-2015,
சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வக்கீல் பவானிசிங்கின் இறுதி வாதம் நிறைவடைந்தது. இந்த மாத இறுதியில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
38-வது நாள் விசாரணை
சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் தினமும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் 38-வது நாள் விசாரணை நேற்று நடைபெற்றது. தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் 7-வது நாளாக நேற்று வாதிட்டார். ஜெயலலிதா உள்பட 4 பேரும் கட்டிடங்கள் கட்டியது மற்றும் டைல்ஸ் மற்றும் மார்பிள்ஸ் வாங்கியது, சுதாகரன் திருமண செலவு, நகைகள் வாங்கியது, ஐதராபாத்தில் திராட்சை தோட்டத்தில் கட்டிடம் கட்டியது ஆகியவை தொடர்பாக பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலத்தை வாசித்தார்.
அப்போது ஜெயலலிதா வக்கீல் குமார் எழுந்து, ‘‘ஜெயலலிதாவுக்கு சொந்தமாக 3 கட்டிடங்களுக்கு பயன்படுத்திய மார்பிள்ஸ் விலை மதிப்பு கூட்டி போடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. ஒரு சதுர மீட்டர் ரூ.5,000 முதல் ரூ.18 ஆயிரம் விலையிட்டு மதிப்பை கணக்கிட்டு உள்ளனர். 1995-ம் ஆண்டு இவ்வளவு விலை கிடையாது. ஆனால் வேண்டுமென்றே விலையை கூடுதலாக மதிப்பிட்டுள்ளனர். இதை கீழ்கோர்ட்டும் ஒப்புக்கொண்டது’’ என்றார்.
வாய்ப்பே இல்லை
அப்போது நீதிபதி குமாரசாமி குறுக்கிட்டு, ‘‘1994, 1995-ம் ஆண்டு மார்பிள்ஸ் இவ்வளவு விலை இருந்ததா? வாய்ப்பே இல்லை. எனக்கு தெரிந்த அளவில் அந்த நேரத்தில் மார்பிள்ஸ் ஒரு சதுர அடி ரூ.100 முதல் ரூ.150 வரை மட்டுமே இருந்திருக்கும். லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரு சதுர அடி ரூ.1,800 வரை கணக்கிட்டு மதிப்பிட்டுள்ளனர். எப்படி இந்த அளவுக்கு விலையை உயர்த்தி மதிப்பிட்டுள்ளனர். இதை மதிப்பிட்டது யார்? எதன் அடிப்படையில் இவ்வாறு மதிப்பிட்டனர். பொது அறிவு(காமன்சென்ஸ்) வேண்டாமா? மதிப்பிட்ட நிபுணர்கள் இருந்தால் வரச்சொல்லுங்கள்’’ என்றார்.
அப்போது அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் எழுந்து, ‘‘தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த விவரங்களின் அடிப்படையில் நான் இங்கே
                                                                                                                மேலும்....

No comments:

Post a Comment