Sunday 1 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (01-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (01-03-2015) மாலை, IST- 04.30 மணி, நிலவரப்படி,

தீவிரவாதிகளுக்கு நன்றி; முதல்வராக பதவியேற்ற உடனேயே சர்ச்சை

ஜம்மு, மார்ச், 01–03-2015,
காஷ்மீர் முதல்வராக .இன்று பதவியேற்றுள்ள முப்தி முஹமது சையது பதவியேற்ற சிறிது நேரத்திலேயே சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். பதவியேற்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் பேசிய சர்சைக்குரிய விஷயங்கள் பின்வருமாறு:-
நான் இந்த தருணத்திலே ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
                                                                                                                           மேலும், . ..  .

63–வது பிறந்த நாள் மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி முத்தம் கொடுத்து ஆசி

சென்னை, மார்ச், 01–03-2015,
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது 63–வது பிறந்த நாள் விழாவை இன்று கொண்டாடினார். இதையொட்டி அதிகாலை 6 மணி அளவில் அவர் தனது மனைவியுடன் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தனது தந்தையும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.
ஸ்டாலினை கட்டித்தழுவி முத்தமிட்டு கருணாநிதி வாழ்த்தினார். பின்னர் குடும்பத்தினருடன் பிறந்த நாள் கேக் வெட்டினார்.
முன்னதாக மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கினார். இதே போல் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காலை 8.30 மணி அளவில் ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொண்டர்களை சந்தித்தார்.
                                                                                                            மேலும், . . . .

கணவர் தியாகுவுக்கு எதிராக கவிஞர் தாமரையின் தர்ணா போராட்டம் வேளச்சேரிக்கு மாற்றம்

சென்னை, மார்ச், 01–03-2015,
பிரபல சினிமா பாடலாசிரியர் தாமரை. இவருக்கும் எழுத்தாளர் தியாகுக்கும் கடந்த 2001–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் தாமரையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தியாகு பிரிந்து விட்டார்.
ஓடிப்போன கணவரை சேர்த்து வைக்க கோரி,
                                                                                                             மேலும், . . . . 

வானில் வெடித்து கேரளாவில் 50 இடங்களில் விழுந்த மர்ம பொருள் தொட வேண்டாம் என வானிலை இலாகா எச்சரிக்கை

திருவனந்தபுரம், மார்ச், 01–03-2015,
கேரள மாநிலம் எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கண்ணணூர், கோழிக்கோடு, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 6 மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு வானில் தீப்பிழம்பு தோன்றியதை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்து உள்ளனர்.
மின்னல் வேகத்தில் ராக்கெட் போல் அந்த தீப்பிழம்பு வானில் பயணித்ததாகவும் அப்போது பயங்கர சத்தம் கேட்டதாகவும், அந்த நேரத்தில் நில அதிர்வை உணர்ந்ததாகவும் அந்த பகுதி பொதுமக்கள் பீதியுடன் தெரிவித்துள்ளனர்.
இந்த மர்ம தீப்பிழம்பு இந்த 6 மாவட்டங்களில் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் சிதறி விழுந்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தென்னை மரங்கள் உள்பட பயிர்கள் தீயில் கருகி சாம்பலாகி உள்ளது.
அதிர்ஷ்டவசமாக குடியிருப்புகள் மீது இந்த தீப்பிழம்பு விழாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
                                                                                                  மேலும், . . . .

No comments:

Post a Comment