Tuesday 10 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (10-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (10-03-2015) மாலை, IST- 02.30 மணி, நிலவரப்படி,

மஸரத் ஆலம் மீதான வழக்குகள் தேசிய புலனாய்வு குழுவுக்கு மாற்றம் மீண்டும் கைது செய்ய நடவடிக்கை

புதுடெல்லி, மார்ச், 10–03-2015,
காஷ்மீரில் விடுதலை செய்யப்பட்டுள்ள பிரிவினைவாத தலைவர் மஸரத் ஆலம் மீது மொத்தம் 27 குற்ற வழக்குகள் உள்ளன.
இந்த 27 வழக்குகளிலும் மஸரத் ஆலம் ஜாமீன் பெற்று விட்டதாக காஷ்மீர் அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அளித்த பதிலில் குறிப்பிட்டிருந்தது.
மத்திய உள்துறை அமைச்சகம் இதுபற்றி ஆய்வு செய்த போது காஷ்மீர் ஐகோர்ட்டு மஸரத் ஆலம் விடுதலைக்காக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தெரிய வந்தது. மேலும் மஸரத் ஆலம் மீது நிலுவையில் உள்ள 27 வழக்குகளில் 8 வழக்குகள் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகி இருப்பது தெரிந்தது.
இந்த சட்டத்தின் கீழ் உள்ள எந்த ஒரு வழக்கையும் மாநில அரசிடம் இருந்து தேசிய புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற முடியும். இதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது.
                                                                                                  மேலும்....

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு: தாயின் அருகே தூங்கிய 5 மாத பெண் குழந்தை கடத்தல் கடத்தல்காரியை பிடிக்க தனிப்படை அமைப்பு



சென்னை, மார்ச், 10–03-2015,
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தாயின் அருகே தூங்கிக்கொண்டிருந்த 5 மாத பச்சிளம் பெண் குழந்தையை கடத்திய கடத்தல்காரியை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடிவருகின்றனர்.
மேற்பார்வையாளர்
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ராஜா (வயது 29). இவருடைய மனைவி பத்மா செல்வி (28). இந்த தம்பதியருக்கு பவன் (4) என்ற மகனும், பவனா (4) என்ற மகளும், 5 மாத பச்சிளம் பெண் குழந்தை யாழினி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். பவன் மற்றும் பவனா ஆகிய 2 பேரும் இரட்டை குழந்தைகள்.
ராஜா-பத்மா செல்வி தம்பதியர் தங்கள் பிள்ளைகளுடன் சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வருகின்றனர். ராஜா தனியார் கட்டுமான கம்பெனி ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். ராஜா கடந்த சில நாட்களாக கடுமையான சிரமத்தை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
பழனி எக்ஸ்பிரஸ்
இதனால் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்வதற்கு முடிவு எடுத்தார்.
                                                                                                             மேலும்....

வேளாண்மைத்துறை அதிகாரி தற்கொலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கியது

நெல்லை, மார்ச், 10–03-2015,
நெல்லை வேளாண்மைத்துறை அதிகாரி தற்கொலை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கியது.
அதிகாரி தற்கொலை
பாளையங்கோட்டை திருமால் நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (வயது 57). இவர் நெல்லை வேளாண்மைத்துறையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார்.
முத்துக்குமாரசாமி கடந்த 20-ந் தேதி நெல்லை தச்சநல்லூர் ரெயில்வே கேட் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
வேளாண்மைத்துறையில் டிரைவர்கள் நியமனம் தொடர்பாக மேலிட நெருக்கடி காரணமாக அவர்,
                                                                                                      மேலும்....

சென்னையில் காதலியை கொன்று உடலை காரில் கடத்த முயன்ற வாலிபர் குட்டு வெளிபட்டதும் தப்பி ஓட்டம்


சென்னை, மார்ச், 10–03-2015,
சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இக்கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கீழ்ப்பாக்கம் தலைமை செயலக காலனி பராக்கா ரோட்டில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கண்ணப்பன். இவரது மகன் தினேஷ் (25). அம்பத்தூரில் தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.கடந்த சில நாட்களாக உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்த கண்ணப்பன், தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மனைவி உடனிருந்து அவரை கவனித்து வருகிறார்.
இதனால் தினேஷ் மட்டும் அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு 10.30 மணி அளவில் தினேஷ் போர்வை மற்றும் மெத்தையால் சுற்றி கட்டப்பட்ட மூட்டை ஒன்றை லிப்ட் மூலமாக இறக்கி கீழே கொண்டு வந்தார். அதனை தனது காரில் ஏற்றுவதற்காக முயற்சி செய்தார். லிப்ட் மூலமாக மூட்டையை கீழ் தளத்துக்கு கொண்டு வந்து விட்ட அவரால், காரில் ஏற்ற முடியவில்லை.
இதனால் பக்கத்து வீட்டுக்காரரை துணைக்கு அழைத்தார்.
                                                                                                               மேலும்....

No comments:

Post a Comment