Thursday 5 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (06-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (06-03-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

கற்பழிப்பு குற்றவாளியின் பேட்டி, தடையை மீறி ஒளிபரப்பு பி.பி.சி. நிறுவனம் மீது மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி, வெள்ளிக்கிழமை, மார்ச் 06, 2015,
டெல்லி கும்பல் கற்பழிப்பு குற்றவாளியின் பேட்டியை தடையை மீறி பி.பி.சி., ஒளிபரப்பியது. அந்த நிறுவனத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.
டெல்லி மாணவி கற்பழிப்பு
தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில், 23 வயது துணை மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த இந்தியாவையே தலைகுனிய வைத்தது.
கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 16-ந்தேதி நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான ராம்சிங் என்பவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
                                                                                                              மேலும்....

சுஷ்மா சுவராஜ் இன்று இலங்கை போகிறார் 13-ந் தேதி தொடங்கும் மோடியின் பயண ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் நரேந்திர மோடி 13-ந்தேதி இலங்கை செல்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கை செல்கிறார்.
புதுடெல்லி, வெள்ளிக்கிழமை, மார்ச் 06, 2015,
பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 13-ந் தேதி இலங்கைக்கு செல்கிறார்.
யாழ்ப்பாணம் செல்கிறார்
இலங்கையில் அந்நாட்டு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார்.
அத்துடன், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் நகருக்கு அவர் செல்கிறார். அவர் யாழ்ப்பாணம் நகருக்கு செல்வதை இலங்கை சுகாதார மந்திரி ரஜிதா சேனரத்னே நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், யாழ்ப்பாணத்துக்கு சென்றார்.
                                                                                                                    மேலும்....
லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் இருக்கும் வரை திராவிட இயக்கத்தை யாரும் அழித்து விடலாம் என்று கனவு காண வேண்டாம் செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி பேச்சு

சென்னை, வெள்ளிக்கிழமை, மார்ச் 06, 2015
லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் இருக்கும் வரை திராவிட இயக்கத்தை யாரும் அழித்து விடலாம் என்று கனவு காண வேண்டாம் என்று கருணாநிதி பேசினார்.
தி.மு.க. செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி பேசியதாவது:-
இது எதற்காகக் கூட்டப்பட்ட செயற்குழு? புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள்.
                                                                                                                    மேலும்....

தமிழகத்தில் பா.ஜனதாவை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும் அகில இந்திய தலைவர் அமித்ஷா பேச்சு

கோவை, வெள்ளிக்கிழமை, மார்ச் 06, 2015,
‘தமிழகத்தில் பாரதீய ஜனதாவை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும்’ என்று கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா கூறினார்.
அமித்ஷா கோவை வருகை
இந்தியா முழுவதும் பா.ஜனதா கட்சியை வலுப்படுத்தும் பணியை கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா மேற்கொண்டு வருகிறார். இதன்படி நேற்று கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கோவை அவினாசி சாலையில் உள்ள கோல்டு வின்ஸ் ஏ.பி.திருமண மண்டபத்தில் நடந்த மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த 42 மாவட்ட தலைவர்கள், 600 மண்டல தலைவர்கள், உறுப்பினர் சேர்ப்பு
                                                                                                                         மேலும்....

No comments:

Post a Comment