Wednesday 4 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (05-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (05-03-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு கற்பழிப்பு குற்றவாளியின் பேட்டியை ஒளிபரப்ப மத்திய அரசு தடைவிதிப்பு பாராளுமன்றத்தில் உள்துறை மந்திரி அறிவிப்பு

திகார் சிறையில் கற்பழிப்பு குற்றவாளியிடம் பேட்டி எடுக்க அனுமதித்ததற்கு பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அந்த பேட்டியை ஒளிபரப்ப தடை விதிக்கப்படுவதாக உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அறிவித்தார்.
புதுடெல்லி, மார்ச். 05-03-2015,
டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி தனது நண்பருடன் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது.
திகார் சிறையில் கற்பழிப்பு குற்றவாளி
அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாடு முழுவதிலும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த 6 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
                                                                                                       மேலும்....

வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தாததற்கு எதிர்ப்பு: ஏப்ரல் 28-ந்தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிட மத்திய அரசு ஊழியர்கள் முடிவு ‘காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் திட்டம்’

சென்னை, மார்ச். 05-03-2015,
மத்திய அரசு ‘பட்ஜெட்’டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாததை கண்டித்து ஏப்ரல் 28-ந்தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிட போவதாகவும், ஜூலை மாதத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு சமர்ப்பித்துள்ள ‘பட்ஜெட்’டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தாததை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். தலைவர் ஜே.ராமமூர்த்தி, பொருளாளர் எஸ்.சுந்தரமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது எம்.துரைப்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
                                                                                                        மேலும்....

சென்னையில் நடந்த மராத்தான் போட்டியில் முறைகேடு வெற்றி பெற்ற வீரர்களுக்கு போலி காசோலை கொடுத்து மோசடி

சென்னை, மார்ச். 05-03-2015,
சென்னையில் நடந்த மராத்தான் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகைக்கு போலி காசோலை கொடுத்து மோசடி நடந்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
மராத்தான் ஓட்டம்
சென்னையில் கடந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதி அன்று புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது. சர்வதேச அளவில் நடந்த இந்த ஓட்டப்பந்தயத்தில் வெளிநாட்டு வீரர்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலகளின் சர்வதேச, தேசிய விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் இந்திய தடகள வீரர் சோஜிமாத்யூ முதல் பரிசு பெற்றார். கென்ய நாட்டு வீரர் டேவிட்ஜிப்னோவிச் 2-வது பரிசை தட்டிச் சென்றார். தமிழக வீரர் எழில்நிலவன் 3-வது பரிசை வென்றார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், 2-வது பரிசு ரூ.50 ஆயிரம், 3-வது பரிசு ரூ.25 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. வீரர்களுக்கான பரிசு தொகை வங்கி காசோலைகளாக கொடுக்கப்பட்டன. ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் போலி காசோலைகளாக திரும்பி வந்து விட்டன. மேலும் கென்ய வீரர் தனக்கு கிடைக்க வேண்டிய பரிசு பணம் கிடைக்காததால், சொந்த நாட்டுக்கு போக முடியாமல் சென்னையிலேயே தவித்த நிலையில் உள்ளார். பரிசு பணம் கிடைக்காமல் மோசம் போன வீரர்கள் 3 பேரும், இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் தாமஸ் மூலம் வளசரவாக்கம் போலீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் கொடுத்தனர்.
                                                                                                            மேலும்....

பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதல்: புதுப்பெண் உள்பட 5 பேர் பலி



வாழப்பாடி, மார்ச். 05-03-2015,
பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் புதுப்பெண் உள்பட 5 பேர் பலியானார்கள். விபத்துக்கு காரணமான பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டோவில் பயணம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூரில் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் கோவிலில் புதுமண தம்பதிகள் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் திரளாக கூடி இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலுக்கு வந்தவர்கள் ஊருக்கு சென்று வர ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தி வந்தனர்.
காலை 8.15 மணியளவில் பேளூரில் இருந்து நீர்முள்ளிக்குட்டையை சேர்ந்த வெங்கடேசன் (வயது25) என்பவர் தனது ஷேர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு நீர்முள்ளிக்குட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆட்டோவில் மன்னார்பாளையத்தை சேர்ந்த புதுமண தம்பதியான முருகன் என்ற முருகேசன்(30), அவரது மனைவி ஜெயந்தி (24) உள்பட ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து மொத்தம் 9 பேர் பயணம் செய்தனர்.
அதே வேளையில் சேலத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று பேளூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
                                                                                                        மேலும்....

No comments:

Post a Comment