Thursday 12 March 2015

இன்றைய முக்கிய செய்திகள் (12-03-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (12-03-2015) மாலை, IST- 03.30 மணி, நிலவரப்படி,

சரியான முடிவுகளை எடுத்து மொரீஷியஸ் வளர்ச்சியின் பாதையில் செல்கிறது பிரதமர் மோடி

போர்ட் லூயிஸ், மார்ச், 12-03-2015,
அரசுமுறை பயணமாக மொரீஷியஸ் சென்றிருக்கும் பிரதமர் மோடி இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
மொரீஷியசின் சுதந்திர தினமான இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "சரியான முடிவுகளை எடுத்து மொரீஷியஸ் வளர்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருப்பதை நான் பெருமையுடன் பார்த்து வருகிறேன். அதே போல் இந்நாட்டு மக்களின் கடின உழைப்பையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். நமக்கு இடையில் நீண்ட கால உறவு இருந்து வந்திருக்கிறது. அதன் பயனாக இந்தி மொழிக்கு மொரீஷியஸின் பங்களிப்பு மிக பெரியது" என்று கூறினார்.
                                                                                                                  மேலும்....

நெல்லை காப்பகத்தில் பெண் டாக்டர் சிறைவைப்பு தோழி உதவியுடன் மீட்கப்பட்டார்

நெல்லை, மார்ச், 12-03-2015,
சென்னை எர்ணாவூர் அருகே உள்ள ராம கிருஷ்ண நகரை சேர்ந்த தொழிலதிபர் இர்வின் பட்டுராஜ். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி சண்முகாபுரம் ஆகும். இர்வின் பட்டுராஜின் மகள் சாந்தினி(வயது26). ஒரே மகள் என்பதால் சாந்தினி மீது அவர் அதிக பாசம் காட்டி வளர்த்து வந்தார். அவரை பல் டாக்டருக்கு படிக்க வைத்தார்.
படிப்பை முடித்த சாந்தினி அந்த பகுதியில் டாக்டர் தினேஷ் என்பவரது மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். இதனிடையே ஒருநாள் சாந்தினி வீட்டில் தனியாக இருந்தபோது அவரது தந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. தன்னை பற்றி வெளியில் கூறிவிடுவாரோ என எண்ணிய இர்வின் பட்டுராஜ், அவரை தூத்துக்குடியில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்தார்.
அங்கு கடந்த ஜனவரி மாதம் 19–ந்தேதி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை தின்று சாந்தினி தற்கொலைக்கு முயன்றார்.
                                                                                                    மேலும்....

ஸ்ரீவைகுண்டம் அருகே அ.தி.மு.க. நிர்வாகி கொலை கைதான வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை 3–வது நாளாக பதற்றம் நீடிப்பு

ஸ்ரீவைகுண்டம், மார்ச், 12–03-2015,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியை சேர்ந்தவர் பிச்சையா (வயது 57). அ.தி.மு.க. கிளை செயலாளரான இவரை நேற்று முன்தினம் மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் அப்பகுதியில் வசிக்கும் ஒரு பிரிவினரின் தெருக்களில் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்த டி.வி., பிரிட்ஜ், பைக் மற்றும் கார்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். மேலும் 60–க்கும் மேற்பட்ட வீடுகளை சூறையாடினர்.
அப்பகுதியில் இருந்த காமராஜர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது.
                                                                                                                               மேலும்....

நான் செய்த ஒரே தவறு
டுவிட்டரில் சுனந்தாவுடன் மோதியது தான்
பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தரார்


புதுடெல்லி, மார்ச், 12-03-2015,
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் பாகிஸ்தான் பத்திரிகை நிருபர் மெஹர் தராரிடம் விசாரணை நடத்தப்படும் என டெல்லி காவல் ஆணையர் பாஸ்சி இன்று தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தரார், போலீசாரின் கேள்விகளை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கின்றேன்.
                                                                                                           மேலும்....

No comments:

Post a Comment