Thursday 5 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (05-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (05-12-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் பா.ஜனதா வெற்றி டெல்லியில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ் கருத்துக்கணிப்பில் தகவல்

புதுடெல்லி, 05-12-2013,
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்றும், டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
5 மாநில சட்டமன்ற தேர்தல்
டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நேற்றுடன் நடந்து முடிந்தன. பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால், அதற்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் அமையும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்கள் மத்தியில் நிலவுகிறது.
எனவே, இந்த தேர்தல் முடிவுகளை அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர்.
5 மாநில சட்டசபை தேர்தலும் முடிவடைந்துவிட்ட நிலையில் ‘இந்திய டுடே’ இணையதளம் உள்ளிட்ட பல்வேறு தனியார் அமைப்புகள், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், டெல்லி ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை, நடத்தி முடிவை வெளியிட்டுள்ளன. அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
டெல்லி
நாட்டின் தலைநகரில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால் டெல்லி சட்டமன்ற தேர்தல், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷீலா தீட்சித் 3–வது முறையாக ஆட்சி செய்து வருகிறார். கடந்த 2008–ல் நடந்த தேர்தலில் இங்குள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பா.ஜனதா 23 இடங்களையே பெற்றிருந்தது.

                                                                                                  மேலும்.....

No comments:

Post a Comment