Sunday 1 December 2013

இன்றைய முக்கிய செய்திகள் (02-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (02-12-2013) 

சுரண்டை அருகே பரிதாபம்மின்சாரம் தாக்கி 2 பேர் சாவுபோலீஸ் தடியடி; பதற்றம்


சுரண்டை, டிசம்பர், 02 -12-2013,

சுரண்டை அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 2 பேரை பரிதாபமாக உயிரிழந்தனர். சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி கலைத்தனர். அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

கிறிஸ்தவ ஆலயம்

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள தன்னூத்து கிராமத்தில் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய கோபுரத்தில் உள்ள மாதா சொரூபம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்னல் தாக்கியதில் கீழே விழுந்தது. ஆனால் மாதா சொரூபம் சேதமடையாமல் காணப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பின்னர் மாதா சிலையை பார்க்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்கின்றனர்.




வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைககளில் கூட்டு பிரார்த்தனை நடைபெறும். இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், விருதுநகர், சிவகாசி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து திரளானவர்கள் பஸ், வேன், கார் போன்ற வாகனங்களில் ஆலயத்துக்கு வந்து இருந்தனர். ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு பின்னர் அசன விருந்து நடந்தது. அப்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

குடி தண்ணீர் பிடிக்க சென்றனர்

இந்த ஆலய தர்மகர்த்தாவாக பீட்டர் மற்றும் ஜாண்சன் உள்ளனர். பீட்டர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவரிடம் தன்னூத்து வடக்கு தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் கணேசன் (35) என்பவர் வேலை பார்த்து வந்தார். பீட்டர் நேற்று மதியம் கணேசனிடம், அருகே உள்ள ஒரு தோட்டத்துக்கு டிராக்டரில் சென்று குடிநீர் பிடித்து விட்டு வரும்படி கூறிஉள்ளார்.

இதையடுத்து பீட்டருக்கு சொந்தமான டிராக்டரின் கணேசன் தண்ணீர் எடுத்து வரச் சென்றார். அப்போது அவருடன் தன்னூத்து மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த காசிபாண்டி மகன் மணிகண்டன் (14) என்ற சிறுவனும் சென்றான். இருவரும் பக்கத்து தோட்டத்துக்கு சென்று தண்ணீர் பிடித்து விட்டு திரும்பி வந்தனர்.


                                                                                                                               மேலும்...... 

No comments:

Post a Comment