Sunday 23 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (24-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (24-11-2014) காலை, IST- 07.30 மணி, நிலவரப்படி,

மத்திய அரசுக்கு எதிராக வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டு உள்ளது.
புதுடெல்லி, நவம்பர், 24-11-2014,
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் தொடங்கி, டிசம்பர் மாதத்தின் 3-வது வாரம் முடிய நடைபெறும்.
இன்று கூடுகிறது
அதன்படி இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 23-ந் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறுகிறது. மொத்தம் 22 அமர்வுகளை கொண்டதாக இந்த கூட்டத்தொடர் இருக்கும்.
பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி கடந்த 6 மாதத்தில் சந்திக்கும் 2-வது முக்கிய கூட்டத்தொடர் இது ஆகும். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
                                                                                                              மேலும், . . .  .

சிசு மரண விகிதம் தமிழ்நாட்டில் குறைந்து உள்ளது மருத்துவ சேவையை குறை கூறி யாரும் அரசியல் ஆதாயம் தேடவேண்டாம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை

சென்னை, நவம்பர், 24-11-2014,
தேசிய அளவில் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சிசு மரண விகிதம் குறைந்துள்ளது. மருத்துவ சேவையை குறை கூறி யாரும் அரசியல் ஆதாயம் தேடவேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிசு மரணம் விகிதம் குறைவு
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலுடன் செயல்படும் தமிழ்நாடு அரசு மருத்துவ சேவையில் சிறப்பாகச் செயல்படும் முதன்மை மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுடன் இணைந்த 43 மருத்துவமனைகள், ஒரு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, 30 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 240 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், 1,751 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள், 134 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் தினசரி 1,800 குழந்தைகளும், ஆண்டுக்கு 6.8 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இந்தியாவிலேயே மிக அதிக சதவீதமான பிரசவங்கள் தமிழகத்தில் குறிப்பாக 99.8 சதவீதம் அரசு மருத்துவநிலையங்களில் நடைபெறுகின்றன.
குறிப்பாக இந்தியாவில் சிசு மரண விகிதம் 40 ஆக இருக்க,
                                                                                                                            மேலும், . . . . 

வேப்பேரி பெண் கொலையில் திடீர் திருப்பம் மனைவியை கொன்று நாடகமாடிய தொழில் அதிபர் கைது பரபரப்பு வாக்குமூலம்

சென்னை, நவம்பர், 24-11-2014,
சென்னை வேப்பேரி கொலை-கொள்ளை வழக்கில், நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
கொலை-கொள்ளை
சென்னை வேப்பேரி, காளயத்தியப்பன் தெருவைச் சேர்ந்தவர் ஹேம்ராஜ் ஜெயின்(வயது 50). இவர் சவுகார் பேட்டையில், எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவரது மனைவி பெயர் மஞ்சு(48). இவர்களுக்கு ஆஷிஷ்புஞ்ச்(23) என்ற மகனும், பூஜா(21) என்ற மகளும் உள்ளனர். வசதி படைத்த, இந்த இனிய குடும்பத்தில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, கடும் புயல் வீசியது போன்று பெரும் சம்பவம் நிகழ்ந்து விட்டது.
அன்றைய தினம் மாலையில் வீட்டில் தனியாக இருந்த மஞ்சு மிகவும் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். வீட்டில் குளியலறையில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்ட 1 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும், தகவல் வெளியானது.
கொலை நடந்த வீட்டில் அன்றைய தினம் பூச்சி மருந்து அடித்த ஊழியர் ஒருவர்தான், மஞ்சுவை கொலை செய்து விட்டு, நகைகளை கொள்ளை அடித்துச் சென்று விட்டதாக, மஞ்சுவின் கணவர் ஹேம்ராஜ் ஜெயின் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதை அடிப்படையாக வைத்து போலீசார் முதல் கட்ட விசாரணை தொடங்கினார்கள்.
                                                                                                         மேலும், . .  . .

அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைப்பற்றி விவாதிக்க சட்டசபையை கூட்ட வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளும் வலியுறுத்துகின்றன கருணாநிதி அறிக்கை

சென்னை, நவம்பர், 24-11-2014,
அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை பற்றி விவாதிக்க சட்டசபையை கூட்ட வேண்டும் என்று நான் மட்டுமல்ல அனைத்து எதிர்கட்சிகளும் திரும்ப திரும்ப கேட்டுள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டசபைக்குஏன் வருவதில்லை?
கேள்வி:-நீங்கள் சட்டசபைக்கு வருவதில்லை என்றும் பேரவையை எப்போது கூட்டுவது என அரசுக்குத்தெரியும் என்றும் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் மீண்டும் கூறியிருக்கிறாரே?
                                                                                                                     மேலும், . . . .

No comments:

Post a Comment