Thursday 20 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (20-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (20-11-2014) காலை, IST- 11.30 மணி, நிலவரப்படி,

'நான் குற்றமற்றவன்'- சாமியார் ராம்பால் குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்கிறார்

ஹிசார், நவம்பர், 20-11-2014,
அரியானா மாநில சாமியார் ராம்பால் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். முன்னதாக நிருபர்களிடம் பேசிய சாமியார் நான் குற்றமற்றவன் என்றும், எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைதும் தவறானவை என்றும் கூறியுள்ளார். அரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள ஆஸ்ரமத்தில் சாமியார் ராம்பாலை பலர் பின்பற்றி வருகின்றனர். இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. கோர்ட்டில் ஆஜராகாமல் எத்தனித்து வந்தார். இதனையடுத்து கோர்ட் வாரண்ட் படி சாமியார் கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்ய முற்பட்டபோது ஆசிரமத்தில் போலீசாருக்கும், அங்குள்ள சாமியார் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகள், கற்கள் வீசப்பட்டன. போலீசார் கண்ணீர் புகை குண்டு வெடித்து கூட்டத்தினரை கலைத்தனர். இந்த சம்பவத்தினால் ஆசிரமம் அருகே பெரும் பதட்டம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தினால் 6 பேர் உயிழந்தனர்.
போலீசார் வசம் உள்ள சாமியார் இன்று மதியம் 2 மணியளவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதனையொட்டி கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய எட்டு சாமியார்கள் லிஸ்ட்
இந்தியாவில் சாமியார்கள் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. இதுவரை 8க்கும் மேற்பட்டவர்கள் போலீசார் வசம் சிக்கியுள்ளனர். கற்பழிப்பு, கொலை, நிலம் அபகரிப்பு, மோசடி போன்றவை இந்த சாமியார்கள் மீதான முக்கிய குற்றச்சாட்டுக்கள் ஆகும்.
                                                                                                மேலும், . . . . . .

ஐதராபாத் தொழில் அதிபரை கடத்த முயன்ற போலீஸ்காரர் கண்காணிப்பு கேமிரா காட்டி கொடுத்தது

நகரி, நவம்பர், 20-11-2014,
ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நித்யானந்தா ரெட்டி (50). நாட்டின் 10 மருந்து கம்பெனிகளில் ஒன்றாக திகழும் அரவிந்தோ பார்மா நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார். இவர் நேற்று காலை தனது சகோதரர் பிரசாத் ரெட்டியுடன் ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் உள்ள கே.பி.ஆர். பூங்காவில் வாக்கிங் சென்றார்.
பின்னர் வீடு திரும்ப தனது காரில் ஏறிய போது ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த ஒரு வாலிபர் அவரை மிரட்டி காரில் பின் இருக்கையில் ஏறி தான் சொல்லும் இடத்துக்கு காரை ஓட்டும்படி கூறி அவரை கடத்த முயன்றார்.
சுதாரித்துக் கொண்ட நித்யானந்தா ரெட்டி தனது கைதுப்பாக்கியால் அந்த மர்ம நபரின் துப்பாக்கி தட்டி விட்டார். அதோடு அவனை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.
இந்த சண்டையில் கார் தாறுமாறாக நகர தொடங்கியது. இதனை வாக்கிங் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
                                                                                                   மேலும், . . . . . . . 

350 டன் பாடப்புத்தகங்கள் மோசடி கல்வி அதிகாரிகள் 3 பேரிடம் போலீஸ் விசாரணை

கோவை, நவம்பர், 20-11-2014,
கோவையில் உள்ள பள்ளிகளின் குடோன்களில் சமச்சீர் கல்வி திட்டத்தில் கோர்ட்டால் ஏற்றுக்கொள்ளப்படாத 350 டன் அரசு பாடப்புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
அந்த பாடப்புத்தகங்கள் மோசடியாக கடத்தி சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு விற்கப்பட்டது. இந்த மோசடி விவகாரத்தில் கோவை மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் உள்பட 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அலுவலர்கள் சரவணக்குமார், சேது ராமலிங்கம் ஆகியோரை கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சேதுராமலிங்கத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு (எண்–6) மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி அளித்தது.
                                                                                                    மேலும், . . . .  .

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ராஜபக்சே பொது மன்னிப்பு தமிழக மீனவர்கள் 5 பேரும் விடுதலை விமானம் மூலம் இன்று திருச்சி வருகிறார்கள்

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சே பொதுமன்னிப்பு வழங்கியதை தொடர்ந்து, நேற்று அவர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள். 5 பேரும் விமானம் மூலம் இன்று திருச்சி அழைத்து வரப்படுகிறார்கள்.
கொழும்பு, நவம்பர், 20-11-2014,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட்.
தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை
கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி, கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இவர்களை, போதைப்பொருள் கடத்தியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களுடன் இலங்கையைச் சேர்ந்த மேலும் 3 பேரும் கைது ஆனார்கள். கொழும்பு நகரில் உள்ள வெலிக்கடை சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கை விசாரித்த கொழும்பு ஐகோர்ட்டு, 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த அக்டோபர் 30-ந் தேதி தீர்ப்பு கூறியது.
                                                                                                               மேலும், . . . . . 

No comments:

Post a Comment