Thursday 13 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (14-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (14-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

மியான்மர் நாட்டில் உலக தலைவர்களுடன் நரேந்திர மோடி சந்திப்பு சீன பிரதமருடன் முக்கிய ஆலோசனை

நே பி தா, நவம்பர், 14-11-2014,
மியான்மர் நாட்டில் சீன பிரதமர் லீ கேகியாங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
உலக தலைவர்களுடன் மோடி சந்திப்பு
மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி ஆகிய நாடுகளுக்கு 10 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்று உள்ளார். முதல் கட்டமாக, இந்தியா-ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக மியான்மருக்கு சென்றார். அங்குள்ள நே பி தா நகரில் இம்மாநாடுகள் நடைபெற்றன.
மாநாட்டுக்கு வந்திருந்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை அங்கு அவர் சந்தித்து பேசினார். நே பி தா நகரில் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
                                                                                              மேலும், . . .  . .

சகதிக்காடான கோயம்பேடு மார்க்கெட்: சென்னையில் தொடர் மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது




சென்னை, நவம்பர், 14-11-2014,
சென்னையில், தொடர் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோயம்பேடு மார்க்கெட் சகதிக் காடாக மாறியது.
வடகிழக்கு பருவமழை
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் 2 நாட்களாக இரவு, பகலாக விட்டு,விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.
தொடர் மழை காரணமாக கோயம்பேடு 100 அடி சாலை, தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலை, அண்ணா சாலை, அண்ணாநகர் சிந்தாமணி சாலை, தரமணி சர்வீஸ் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, புழல் பைபாஸ் சாலை, கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, வேளச்சேரி பிரதான சாலை உள்பட நகரின் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.
                                                                                                                    மேலும், . . . . 

டெல்லியில் நேரு பிறந்த நாள் விழா பாரதீய ஜனதாவினர் மீது ராகுல் காந்தி ஆவேசம் “புகைப்படத்துக்காக சாலைகளை சுத்தம் செய்து, எங்கும் வெறுப்பு விஷத்தை பரப்புகிறார்கள்”

புதுடெல்லி, நவம்பர், 14-11-2014,
டெல்லியில் நேரு பிறந்த நாள் விழாவில் பாரதீய ஜனதாவினரை ராகுல் காந்தி ஆவேசமாக தாக்கிப் பேசினார். அப்போது அவர், “ புகைப்படத்துக்காக சாலைகளை சுத்தம் செய்து, எங்கும் வெறுப்பு விஷத்தை பரப்புகிறார்கள்” என கூறினார்.
நேரு பிறந்த நாள்
இன்று நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் 125-வது பிறந்த நாள். இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்களை காங்கிரஸ் கட்சி நேற்று தொடங்கியது. இதற்கான விழா, டெல்லியில் டால்கோதரா மைதானத்தில் நேற்று நடந்தது.
அப்போது காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் நேருவின் கொள்கைகளை, தொலைநோக்கு பார்வையை கட்டிக்காப்பதற்கு கட்சித் தலைவர் சோனியா காந்தி உறுதிமொழி செய்து வைத்தார்.
மதவாத சக்திகளை எதிர்த்து...
இந்த விழாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                                                மேலும், . .  . .

குன்றத்தூரில் துணிகர சம்பவம் மனைவி, மகனுடன் கல்லூரி பேராசிரியரை கட்டிப்போட்டு கொள்ளை 16 பவுன் நகை, பணத்துடன் காரையும் கடத்தி சென்ற கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

பூந்தமல்லி, நவம்பர், 14-11-2014,
தனியார் கல்லூரி பேராசிரியரின் குடும்பத்தை கட்டிப்போட்டு விட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள், காரையும் கடத்தி சென்றனர். நடு வழியில் நின்ற காரை மட்டும் போலீசார் மீட்டனர்.
கல்லூரி பேராசிரியர்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், இரண்டாம் கட்டளை, சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம்மேத்யூஸ்(வயது 45). இவருடைய மனைவி ஆலிஸ்(41). கணவன்-மனைவி இருவரும் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஹேபல்(12) என்ற மகன் உள்ளான்.
நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்கள்.
                                                                                   மேலும், .  . . . 

No comments:

Post a Comment