Sunday 9 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (10-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (10-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

பிரதமர் நரேந்திரமோடி மத்திய மந்திரிசபையை விஸ்தரித்தார் 21 புதிய மந்திரிகள் பதவி ஏற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று புதிதாக 21 மந்திரிகளை நியமித்தார். அவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதுடெல்லி, நவம்பர், 10-11-2014,
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த மே மாதம் பதவி ஏற்றது.
மந்திரிசபை விரிவாக்கம்
மத்திய மந்திரிசபையில் 22 பேர் கேபினட் மந்திரிகளாகவும், 10 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகளாகவும், 12 பேர் ராஜாங்க மந்திரிகளாகவும் இடம்பெற்று இருந்தனர். அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட சில மூத்த மந்திரிகள் கூடுதல் இலாகா பொறுப்புகளை கவனித்து வந்தனர்.
இதனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது பற்றி பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக ஆலோசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று அவர் தனது மந்திரிசபையை விரிவுபடுத்தினார்.
21 புதிய மந்திரிகள்
புதிதாக 21 மந்திரிகளை நியமித்தார். இவர்களில் 4 பேர் கேபினட் அந்தஸ்து மந்திரிகள் ஆவார்கள். 3 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள். 14 பேர் ராஜாங்க மந்திரிகள்.
கேபினட் மந்திரிகள் பெயர் விவரம் வருமாறு:-
                                                                                                    மேலும், . .  . . . 

விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் முல்லைப்பெரியாறு பிரச்சினையில் நடவடிக்கை எடுத்தது ஜெயலலிதாதான் கருணாநிதிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

சென்னை, நவம்பர், 10-11-2014,
முல்லைப்பெரியாறு பிரச்சினையில் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் நடவடிக்கை எடுத்தது ஜெயலலிதாதான் என்று கருணாநிதிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கருணாநிதியின் அறிக்கை
ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு நித்தமும் மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயலாற்றி வரும் இந்த வேளையில்,
                                                                                                                மேலும், . . . .

ஒரு வாரத்தில் கட்சியின் பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படும் ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை, நவம்பர், 10-11-2014,
ஒரு வாரத்தில் கட்சியின் புதிய பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
ஆலோசனை
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜி.கே.வாசன் புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார். விரைவில் திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்த உள்ளார். இதையொட்டி அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வந்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். நேற்று காலை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் அவர்கள் ஜி.கே.வாசனிடம், புதிய கட்சியில் இணைந்து செயல்பட விரும்புவதாக அவரிடம் தெரிவித்தனர். அவர்களை ஜி.கே.வாசன் வாழ்த்தி வரவேற்றார்.
மக்கள் பிரச்சினைகளுக்கு...
இதில் மாணவர் காங்கிரஸ் மாநிலத்தலைவர் சுனில்ராஜா தலைமையில் 17 மாவட்ட தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
                                                                                                          மேலும், . . . . 

சொற்ப அதிகாரத்தை வைத்துக் கொண்டு சிங்கள மயமாக்கலுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறோம் இலங்கை வடக்குமாகாண முதல்-மந்திரி சி.வி.விக்னேஸ்வரன் பேச்சு

சென்னை, நவம்பர், 10-11-2014,
சொற்ப அதிகாரத்தை வைத்துக் கொண்டு, சிங்கள மயமாக்கலுக்கு முட்டுக்கட்டைபோட்டு வருகிறோம் என்று இலங்கை வடக்குமாகாண முதல்-மந்திரி சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.
வடக்கு மாகாண முதல்-மந்திரி
மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் மறைந்த தேசியதலைவர் கே.ஜி.கண்ணபிரானின் பிறந்தநாளையொட்டி நினைவுப் பேருரை நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அகில இந்திய பொதுச்செயலாளர் டாக்டர் வீ.சுரேஷ் தலைமை தாங்கினார். விழாவில் ‘பாதுகாப்பையும், இறையாண்மையையும் பங்கமின்றிப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில், இலங்கை வடக்கு மாகாண முதல்-மந்திரியும், இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான சி.வி.விக்னேஸ்வரன் பேசியதாவது:-
அதிகாரம் இல்லாத சபை
எல்லா விதத்திலும் எங்களை இயங்கவிடாது தடுப்பதே இலங்கை அரசின் குறிக்கோளாக இருக்கின்றது. அப்படியானால் அதிகாரம் இல்லாத வடமாகாண சபைக்கு ஏன் நீங்கள் தேர்வானீர்கள் என்று கேட்கின்றனர். நியாயமான கேள்வி தான்.
                                                                                           மேலும், . . . . 

No comments:

Post a Comment