Tuesday 4 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (05-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (05-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

நேரில் சென்று பார்வையிட்டார் ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் மத்திய மந்திரி நிதின்கட்காரி அறிவிப்பு


ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய மந்திரி நிதின்கட்காரி தெரிவித்தார்.
ராமேசுவரம், நவம்பர், 05-11-2014,
தென் தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவுத்திட்டம், சேது சமுத்திர திட்டம்.
2005-ல் தொடங்கியது
இந்த திட்டம் நிறைவேறினால், கிழக்கு, மேற்கு கடற்கரை இடையே 424 கடல் மைல் தொலைவு குறையும். பயண நேரமும் 30 மணி நேரம் குறையும். இலங்கையை சுற்ற வேண்டியதும் இல்லை.
இந்த திட்டத்தை மத்தியில் அமைந்திருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலாவது ஆட்சி காலத்தில், 2005-ம் ஆண்டு ஜூலை மாதம், 2-ந் தேதி மதுரையில் நடந்த பிரமாண்ட விழாவில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைத்தார்.
                                                                                                                   மேலும், . . . .

புதிய கட்சி தொடக்க விழாவை 20-ந்தேதிக்கு மேல் நடத்த ஏற்பாடு: திருச்சியில் ஒரு லட்சம் தொண்டர்களை திரட்ட ஜி.கே.வாசன் திட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் பெயரை பெற தீவிர முயற்சி

சென்னை, நவம்பர், 05-11-2014,
திருச்சியில் ஒரு லட்சம் தொண்டர்களை திரட்ட ஜி.கே.வாசன் திட்டமிட்டுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் பெயரை பெற தொடர்ந்து தீவிர முயற்சி நடந்து வருவதால், புதிய கட்சியின் தொடக்க விழாவை 20-ந் தேதிக்கு மேல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ஜி.கே.வாசன்
காங்கிரஸ் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறிய முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், புதிய கட்சியை தொடங்குவதாக சென்னையில் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிவித்தார். கட்சியின் பெயர் மற்றும் கொடியை விரைவில் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
புதிய கட்சி தொடங்குவதாக ஜி.கே.வாசன் அறிவித்த சில மணி நேரங்களிலேயே, காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்பதால் ஜி.கே.வாசனும், அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சியடையவில்லை.
ஆலோசனை கூட்டம்
மாறாக, திருச்சியில் எந்த தேதியில் பொதுக்கூட்டத்தை நடத்தலாம்?, அதற்குள் தமிழ் மாநில காங்கிரஸ் பெயரை மீண்டும் பெறுவது எப்படி?
                                                                                                                    மேலும், . . . 

சென்னை அண்ணா நகரில் டாக்டரிடம் துப்பாக்கிமுனையில் 75 சவரன் நகை கொள்ளை

சென்னை, நவம்பர், 05-11-2014,
சென்னை அண்ணா நகரில் டாக்டரை கட்டிப்போட்டு துப்பாக்கிமுனையில் 75 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
அண்ணாநகரில் துணிகரம்
சென்னை அண்ணாநகர் கிழக்கு 15-வது தெரு ‘க்யூ’ பிளாக்கில் வசித்து வருபவர் டாக்டர் ஆனந்தன். இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவு மருத்துவராக உள்ளார்.
இவருடைய மகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.
                                                                                                    மேலும், . . . . 

கோவை அருகே பயங்கரம்: பேராசிரியை படுகொலை; தடுக்க முயன்ற தாய்க்கும் வெட்டு கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை

கோவை, நவம்பர், 05-11-2014,
கோவை அருகே உதவி பேராசிரியை படுகொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற தாய்க்கும் வெட்டு விழுந்தது. பேராசிரியை கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உதவி பேராசிரியை
கோவை மாவட்டம் காரமடை கணேஷ்நகரை சேர்ந்தவர் தர்மராஜ். கோத்தகிரியில் மின்வாரிய இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாலதி. இவர்களது மகள்கள் ரம்யா (வயது 24), பிரேமா (17). ரம்யா என்ஜினீயரிங் படித்து விட்டு ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். ஈச்சனாரியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். விடுமுறை நாட்களில் தனது வீட்டுக்கு வருவது வழக்கம்.
பிரேமா கோத்தகிரியில் தந்தையுடன் தங்கி அங்கு பிளஸ்-1 படித்து வருகிறார்.
                                                                                                                    மேலும், . . . . 

No comments:

Post a Comment