Friday 7 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (08-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (08-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதமானது சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
புதுடெல்லி, நவம்பர், 08-11-2014,
நாடு முழுவதும் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது, சட்டத்துக்கு விரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி 2010-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
மாநிலத்துக்கு 500 சாதிகள்
1931-ம் ஆண்டுக்கு பிறகு, அதாவது ஆங்கிலேயர் காலத்துக்கு பின்பு இந்தியாவில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது இல்லை.
அந்த காலகட்டத்தில் மிகக் குறைந்த அளவிலான சாதிகளே நாட்டில் கணக்கெடுக்கப்பட்டிருந்தன.
                                                                                                  மேலும்,. . . . . .

சென்னையில் ஜார்ஜ் டவுன் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 99 சதவீத கட்டிடங்கள் அரசின் நடவடிக்கை குறித்து பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, நவம்பர், 08-11-2014,
ஜார்ஜ் டவுன் பகுதியில் 99 சதவீத கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த கட்டிடங்கள் மீது மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை 4 வாரத்தில் தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத கட்டிடங்கள்
சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘ஜார்ஜ் டவுன் பகுதியில் ஏராளமான கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளது. நாராயணன் முதலி தெருவில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வாகனம் அந்த தெருவுக்குள் செல்ல முடியாத அளவு, சாலையை ஆக்கிரமித்து பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில், ஒருவர் இறந்துள்ளார். எனவே, விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உறுப்பினர் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இடிக்க வேண்டும்
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் ஜார்ஜ் டவுன் பகுதியில் விதிமுறை மீறி
                                                                                                                   மேலும், . . . .


பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பை ஏற்று நடவடிக்கை சென்னை மாடம்பாக்கம் ஏரியை சுத்தம் செய்தார், கமல்ஹாசன் பிறந்தநாளை, தூய்மை இந்தியா திட்ட தொடக்க விழாவாக கொண்டாடினார்



பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று நடிகர் கமல்ஹாசன், தனது பிறந்தநாளில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை, நவம்பர், 08-11-2014,
இந்தியாவை சுத்தப்படுத்தும் வகையில் ‘தூய்மையான இந்தியா-2014’ என்ற திட்டத்தை தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 2-ந் தேதி தொடங்கி வைத்தார்.
கமல்ஹாசனுக்கு அழைப்பு
தூய்மை இந்தியா திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்றுமாறு நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான்கான், நடிகை பிரியங்கா சோப்ரா, கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்பட 9 பிரபலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
தமிழகத்தை பொறுத்தவரை தூய்மை இந்தியா திட்டத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் இதனை தனக்கு கிடைத்த ஒரு பெருமையாகவே ஏற்றுக்கொண்டார்.
                                                                                                  மேலும், . . . .,

சென்னையில் நாட்டு வெடிகுண்டுகளுடன் பயங்கர ரவுடிகள் கைது கோர்ட்டு வளாகத்தில் இன்னொரு ரவுடியை வெட்டி சாய்க்க சதித்திட்டம் தீட்டியது அம்பலம்

சென்னை, நவம்பர், 08-11-2014,
சென்னையில் நாட்டு வெடிகுண்டுகளுடன் பயங்கர ரவுடிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரகசிய தகவல்
சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜூக்கு நேற்று முன்தினம் இரவு திடுக்கிடும் ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. சென்னை அய்யப்பன் தாங்கல், காமாட்சியம்மன் நகர், சீனிவாசபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர ரவுடிகள் 4 பேர் தங்கி இருப்பதாக, அந்த தகவலில் தெரியவந்தது. கமிஷனர் ஜார்ஜ் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.
கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் செயல்படும் ரவுடிகள் ஒழிப்பு போலீஸ் படையினரை களத்தில் இறக்கினார்.
                                                                                                   மேலும், . . . . . .

No comments:

Post a Comment