Monday 3 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (04-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (04-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

தமிழ்நாட்டில் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது புதிய கட்சி தொடங்கினார், ஜி.கே.வாசன் கட்சியின் பெயர், கொடியை திருச்சி பொதுக்கூட்டத்தில் அறிவிக்கிறார்

ஜி.கே.வாசன் நேற்று புதிய கட்சியை தொடங்கினார். இதனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. விரைவில் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிவிக்கப்போவதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சென்னை, நவம்பர், 04-11-2014,
காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து, தமிழகத்தில் புதிய கட்சியை தொடங்க முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் முடிவு செய்தார்.
ராஜினாமா
இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், பொருளாளர் கோவை தங்கம் உள்பட இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
புதிய கட்சி தொடங்குவது குறித்து, கடந்த சில நாட்களாக ஆதரவாளர்களை சந்தித்து ஜி.கே.வாசன் கருத்து கேட்டு வந்தார். அதனைத்தொடர்ந்து, தனது முடிவை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நேற்று அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.
ஆதரவாளர்கள் திரண்டனர்
சென்னை மைலாப்பூரில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நேற்று இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
                                                                                                         மேலும், . . . . 

தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

சேலம், நவம்பர், 04-11-2014,
தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்றும், பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5-ந்தேதி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் கடந்த 11-9-2014 அன்று கனிம ஊழல் தொடர்பாக ஆய்வு செய்திட சகாயம் தலைமையில் குழு அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், அக்குழுவை அமைக் கக்கூடாது என்ற நிலையில் தமிழக அரசு இருந்தது. அதற் காக அரசுக்கு ஐகோர்ட்டு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது. ஆனால், இன்று வரை சகாயம் குழு செயல்பட முடியவில்லை. எனவே, கனிம ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. குழுவின் மேற்பார்வையில் விசாரிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் அரசு நிர்வாகம் முழுமையாக முடங்கிக்கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஜெயலலிதா படத்தை எடுத்து வணங்குவதை தவிர, வேறு எதுவும் நிர்வாகத்தில் நடப்பதில்லை.
                                                                                               மேலும், . . . . 

ஜி.கே.வாசன் புதுக்கட்சி தொடங்கியதால் காங்கிரஸ் நொடிந்து போய் விடாது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

சென்னை, நவம்பர், 04-11-2014,
ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கியதால் காங்கிரஸ் நொடிந்து போய் விடாது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
காங்கிரஸ் அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள்
காங்கிரஸ் கட்சியில் பிரிந்து சென்ற ஜி.கே.வாசன் புதிதாக கட்சி தொடங்கியதாக நேற்று அறிவித்தார். அதையொட்டி, நேற்று கலை முதலே தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர்.
மேலும், தேசிய செயலாளர்கள் திருநாவுக்கரசர், டாக்டர் செல்லகுமார், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பிரபாகரன், குமாரதாஸ், மூத்த தலைவர்கள் வடிவேல், கோபன்னா, மாநில பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் என்.ரங்கபாஷியம், பொதுச் செயலாளர் எஸ்.கே.ஏ.அகமது அலி உள்பட கட்சி நிர்வாகிகள் கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்தனர்.
குடும்பம் நொடிந்து விடாது
அவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                                                   மேலும், . . .  .

பால் விலை, பஸ் கட்டணம் உயர்ந்துவிட்டது: தமிழக மக்கள் வழி தெரியாமல் தவித்து கொண்டு இருக்கிறார்கள் கருணாநிதி பேச்சு

சென்னை, நவம்பர், 04-11-2014,
பால் விலை, பஸ் கட்டணம் உயர்ந்துவிட்டதால் தமிழக மக்கள் வழி தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேசினார்.
பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசும் போது கூறியதாவது;-
யாரை எதிர்த்து இன்றைக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்றால், அப்படி நடத்துகின்ற இந்தப் போராட்டம் யாருக்கு எதிராக என்று யாராவது கேட்டால், மன்னிக்க வேண்டும், நம்மால் பதில் சொல்ல முடியாது. காரணம், நம்மால் எதிர்க்கப்படுகிறவர்கள், நம்மால் இந்த நேரத்தில் விமர்சிக்கப்படுபவர்கள் யாரும் இல்லை.
சொல்கிறார்கள் தமிழ்நாட்டில் ஒரு அரசு இருக்கிறது, அந்த அரசுக்கு பெயர் அ.தி.மு.க. அரசு என்று சொல்கிறார்கள்.
                                                                                            மேலும், . . .  .

No comments:

Post a Comment