Saturday 8 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (09-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (09-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

தீவிரவாத அச்சுறுத்தல்: சென்னையில் வணிக வளாகங்கள், திரையரங்குகளில் பாதுகாப்பு அதிகரிப்பு உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி

சென்னை, நவம்பர், 09-11-2014,
தீவிரவாத அச்சுறுத்தலையடுத்து, சென்னையில் வணிக வளாகங்கள், திரையரங்குகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல்
சென்னையை அடுத்த கல்பாக்கம் அனுமின்நிலையத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சென்னை உள்பட தமிழகத்தில் 10 இடங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து சென்னையில் உள்ள வணிக வளாகங்கள், திரையரங்குகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உளத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் நேற்றுமுன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
                                                                                                                   மேலும், . . . . 

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களின் மேல் முறையீட்டு வழக்குக்கு ரூ.20 லட்சம் இந்திய தூதரகத்திற்கு தமிழக அரசு அனுப்பியது

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களின் மேல் முறையீட்டு வழக்கு செலவுக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் வழங்கி உள்ளது.
சென்னை, நவம்பர், 09-11-2014,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொய் வழக்கு
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லேங்க்லெட் என்ற ஐந்து மீனவர்கள் கடந்த 28.11.2011 அன்று மீன்பிடி விசைப்படகில் ராமேசுவரம் மீன்பிடி தளத்திலிருந்து புறப்பட்டு தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து போதைப்பொருள் கடத்தியதாக பொய்யாக குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக யாழ்ப்பாணம் மாகாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்கான பிரிவின்கீழ் உள்நோக்கத்துடன் பொய் வழக்கு ஒன்று இலங்கை அரசால் தொடரப்பட்டது.
இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்றும், கைது செய்யப்பட்ட ஐந்து அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள், (அப்போதைய) தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கேட்டுக்கொண்டார்கள்.
                                                                                      மேலும், . .  .

கிரானைட் முறைகேட்டை வெளியே கொண்டுவர தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கருணாநிதிக்கு, ஓ.பன்னீர்செல்வம் பதில்

சென்னை, நவம்பர், 09-11-2014,
கிரானைட் முறைகேட்டை வெளியே கொண்டுவர தி.மு.க. அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிரானைட் ஊழல்
“சகாயம் ஐ.ஏ.எஸ். விசாரணையில் தாமதம்!” என்று தலைப்பிட்டு கருணாநிதி விஷமத்தனமாக வெளியிட்ட அறிக்கைக்கு, 2.11.2014 அன்று நான் வெளியிட்ட பதில் “அறிக்கையின் வாயிலாக கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு மதுரையில் கிரானைட் கொள்ளைக்கு எவ்வாறு துணைபோனது என்றும், அதனை மூடி மறைக்க என்னென்ன தகிடு தத்தங்களை கருணாநிதி செய்தார் என்றும், ஜெயலலிதா எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது கிரானைட் ஊழல் முறைகேட்டை எதிர்த்து அறிக்கை வெளியிட்டதைப் பற்றியும், தி.மு.க. அரசால் மூடிமறைக்கப்பட்ட கிரானைட் முறைகேட்டினை வெளிக்கொணர்ந்தது ஜெயலலிதாவின் அரசுதான் என்பதையும், கிரானைட் முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்தது மட்டுமல்லாமல் அதுதொடர்பாக எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக தெளிவுபடுத்தியிருந்தேன்.
இந்த அறிக்கையின் மூலம் தங்களது குட்டு வெளிப்பட்டுவிட்டதே என்ற ஆதங்கத்தை “கிரானைட் முறைகேடு - சகாயம் தலைமையில் விசாரணை நடத்த உயர்நீதிமன்றமும்,
                                                                                       மேலும், . . . 

அண்ணாநகர் டாக்டர் வீட்டில் துணிகர கொள்ளை: கொள்ளையர்கள் கொல்கத்தாவில், துப்பாக்கிமுனையில் கைது ரெயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர்

சென்னை, நவம்பர், 09-11-2014,
சென்னை அண்ணாநகர் டாக்டர் வீட்டில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கொல்கத்தாவில் துப்பாக்கிமுனையில் கைது செய்யப்பட்டனர்.
கொள்ளை கும்பல் ரெயில் மூலம் நாளை(திங்கட்கிழமை) சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
துணிகர கொள்ளை
சென்னை அண்ணாநகர் 15-வது ‘க்யூ’ பிளாக்கில் வசித்து வரும் டாக்டர் ஆனந்தன்(வயது 61) வீட்டில் கடந்த 4-ந்தேதி, பட்டப்பகலில் ரூ.4 லட்சம் பணம், 119 பவுன் நகைககள் கொள்ளையடிக்கப்பட்டன. இவ்விவகாரத்தில், டாக்டர் வீட்டு வேலைக்கார பெண் அல்கீமா பேபி (32) போலீசாரிடம் சிக்கினார்.
விசாரணையில், கொல்கத்தாவை சேர்ந்த அந்த பெண்ணின் கணவர் இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் சேர்ந்து திட்டமிட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் கொள்ளையர்கள் சென்னையில் தங்கியிருந்த லாட்ஜில் இருந்து தப்பி செல்லும் வீடியோ பதிவும் போலீசார் கையில் சிக்கியது.
கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவர்களை பிடிக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், அண்ணாநகர் துணை கமிஷனர் மனோகரன் மேற்பார்வையில் 8
                                                                                 மேலும், . . . . 

No comments:

Post a Comment