Sunday 2 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (03-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (03-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

மத்திய அரசின் நடவடிக்கை சரியான பாதையில் செல்கிறது கருப்பு பணத்தை மீட்பது உறுதி பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
 
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்கும் பிரச்சினையில் மத்திய அரசின் நடவடிக்கை சரியான பாதையில் செல்வதாகவும், எனவே அந்த பணத்தை மீட்பது உறுதி என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
புதுடெல்லி, நவம்பர், 03-11-2014,
பிரதமர் நரேந்திர மோடி ‘மனம் திறந்த பேச்சு’ என்ற பெயரில் கடந்த மாதம் வானொலியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.
அதேபோல் நேற்று மீண்டும் அவர் வானொலியில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
புதிய உற்சாகம்
தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பிறகு இன்று முதன் முறையாக உங்களை சந்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். சென்ற முறை நான் இங்கு உரையாற்றிய பிறகு புதிய உற்சாகத்தையும், புதிய அனுபவத்தையும் பெற்று இருக்கிறேன்.
இந்த நாட்டின் இளைஞர்கள் தேசத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கிறார்கள்.
                                                                                                               மேலும், . . .  .

தற்கொலை படை தாக்குதலில் 55 பேர் பலி பாகிஸ்தான் வாகா எல்லையில் பயங்கரம்

லாகூர், நவம்பர், 03-11-2014,
பாகிஸ்தானில் வாகா எல்லையில் நேற்று நடந்த தற்கொலை படை தாக்குதலில் 55 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
தற்கொலை தாக்குதல்
பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே வாகா எல்லை உள்ளது. இந்த எல்லையையொட்டி பாகிஸ்தானுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடந்தது. அணிவகுப்புடன் கூடிய அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் அங்கிருந்து புறப்பட தயார் ஆயினர்.
அப்போது அங்கே வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவர் அங்கிருந்த இரும்பு ‘கேட்’ மீது மோதி, தனது உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். அப்போது அந்தப் பகுதியே அதிர்ந்தது. எங்கும் ஒரே மரண ஓலம் கேட்டது. அந்தப் பகுதியில் அமைந்திருந்த கடைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
55 பேர் பலி
இந்த சம்பவத்தில் 55 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், 120 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
                                                                                                                    மேலும், . .  . . .
கூட்டணிக்கு போக்கு காட்டும் பா.ம.க., ம.தி.மு.க., தி.மு.க., மேலிட வட்டாரம் அதிர்ச்சி

சென்னை, நவம்பர், 03-11-2014,
ம.தி.மு.க.,வும், பா.ம.க., வும், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் விஷயத்தில், போக்கு காட்டி வருவதால், தி.மு.க., மேலிட வட்டாரம் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பதாக, அந்தக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
யோசனை: தற்போது, பா.ஜ., தலைமை மீது, லேசான அதிருப்தியில் இருக்கும் பா.ம.க.,வும், - ம.தி.மு.க.,வும், வரும் 2016 சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க., வுடன் கூட்டணி அமைக்கலாமா என்ற யோசனையில் ஆழ்ந்துஇருந்தன.இந்தச் சூழ்நிலையில், கடந்த வாரம் மாமல்லபுரத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் பேரன் - பேத்தி திருமணம் நடந்தது.
                                                                                                          மேலும், . . .  . .

‘ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியை விட்டு செல்ல மாட்டார்’ பதவியேற்ற பின்னர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

சென்னை, நவம்பர், 03-11-2014,
ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே செல்ல மாட்டார் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
பதவி ஏற்றார்
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது பதவியை ஏற்றுக்கொள்வதற்காக சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அவரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவரிடம் முன்னாள் தலைவர் ஞானதேசிகன் பொறுப்புகளை ஒப்படைத்து, வாழ்த்து தெரிவித்தார். இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.
அதனை தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரிகள் ஜெயந்தி நடராஜன், திருநாவுக்கரசர், துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, மற்றும் விஜயதாரணி எம்.எல்.ஏ., அகில இந்திய செயலாளர் செல்லக்குமார், ஜெயக்குமார், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் நாசே ஆர்.ராஜேஷ் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம், நாசே ராமச்சந்திரன், நிர்வாகிகள் நாஞ்சில் பிரசாத், கவுன்சிலர் தமிழ்செல்வன், சித்ரா கிருஷ்ணன், அகரம் கோபி, சூளை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பவுர்ணமி தொடக்கம்
தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசியதாவது:-
                                                                                                      மேலும், . . . .  . .

No comments:

Post a Comment