Saturday 1 November 2014

இன்றைய முக்கிய செய்திகள் (02-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (02-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

கட்சி மேலிடத்துடன் கருத்து வேறுபாடு தமிழ்நாட்டில் காங்கிரஸ் உடைகிறது த.மா.கா. மீண்டும் உதயம் ஆகிறது ஜி.கே.வாசன் நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி உடைகிறது. கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் த.மா.கா.வை தொடங்குகிறார். இதுபற்றி அவர் நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.
சென்னை, நவம்பர், 02-11-2014,
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஜி.கே.மூப்பனார், கடந்த 1996-ம் ஆண்டில் தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
காங்கிரசில் இணைந்த த.மா.கா
அப்போது நடந்த சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூப்பனார் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இருந்து வெளியேறி த.மா.கா.வை தொடங்கினார். அந்த தேர்தல்களில் த.மா.கா., தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.
மூப்பனாரின் மறைவுக்கு பிறகு அவரது மகன் ஜி.கே.வாசன் த.மா.கா. கட்சியை தலைமை தாங்கி நடத்தினார். கடந்த 2002-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மதுரையில் நடைபெற்ற விழாவில் அவர், தாய் கட்சியான காங்கிரசுடன் த.மா.கா.வை இணைத்தார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலும் அவர் மந்திரியாக இடம் பெற்றார்.
மீண்டும் உதயமாகிறது
இந்த நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி உடைந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் த.மா.கா. உதயமாகிறது.
                                                                                                    மேலும், . . . . 

ராமேசுவரத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் பங்கேற்பு

ராமேசுவரம், நவம்பர், 02-11-2014,
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த இலங்கை அரசை கண்டித்து ராமேசுவரம் தங்கச்சி மடத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரின் குடும்பத்தினரும் கண்ணீருடன் கலந்து கொண்டனர்.
தூக்கு தண்டனை
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் வில்சன், எமர்சன், பிரசாத், அகஸ்டஸ், லாங்லெட் ஆகிய 5 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது இலங்கை கடற்படை பிடித்துச் சென்று ‘போதைப்பொருள் வழக்கு’ பதிவு செய்தது. இந்த வழக்கில் 5 மீனவர்களுக்கும் கொழும்பு உயர்நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்தது.
இதனால் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
                                                                                                             மேலும், . . . .

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமனம் இன்று பதவி ஏற்கிறார்


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2-வது முறையாக இந்த பொறுப்பை ஏற்க உள்ளார்.
ஞானதேசிகன் ராஜினாமா
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த ஞானதேசிகன் நேற்று முன்தினம் திடீரென அந்த பதவியை ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் தலைமை மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். காங்கிரஸ் புதிய உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட அட்டையில் காமராஜர், மூப்பனார் படத்தை அகற்ற மேலிட தலைவர்கள் உத்தரவிட்டதால் விலகல் முடிவை எடுத்து இருப்பதாகவும் ஞானதேசிகன் குறிப்பிட்டார்.
இதற்கிடையே தமிழக கட்சி நிலைமை குறித்து டெல்லியில் சோனியாகாந்தி வீட்டில் நேற்று அவசர கூட்டம் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஞானதேசிகனின் ராஜினாமாவை உடனே ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
புதிய தலைவர்ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
இதையடுத்து தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவராக யாரை நியமனம் செய்யலாம் என்று ஆலோசனை நடந்தது.
                                                                                                     மேலும், . . . . 

வெற்றி மீது மட்டும் கவனம் இருந்தால் போதாது; வாக்காளர் பட்டியல் தயாரிப்பிலும், கவனமாக இருக்க வேண்டும் தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவுரை

சென்னை, நவம்பர், 02-11-2014,
வெற்றி மீது மட்டும் கவனம் இருந்தால் போதாது, வாக்காளர் பட்டியல் தயாரிப்பிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வாழ்த்து
வேளாண்மைத்துறை செயலாளராக பணியாற்றிய சந்தீப் சக்சேனா ஐ.ஏ.எஸ்., தமிழகத் தலைமைதேர்தல் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டு, அந்தப் பணியிலே அவர் பொறுப்பேற்று, செய்தியாளர்களுக்கு தனது முதல் பேட்டியை அளித்திருக்கிறார். முக்கியமான பொறுப்பை ஏற்றுள்ள அவரை தி.மு.க. சார்பில் வாழ்த்துகிறேன்.
எந்தவொரு தேர்தலாக இருந்தாலும், அது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அல்லதுதேர்தல் அறிவிக்கை நிரல், தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட பிறகு தான் தொடக்கம் என்றோ, அல்லது கட்சியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் தான் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டுமென்று நினைப்பது முற்றிலும் தவறாகும்.
தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே புதிய வாக்காளர்களை சேர்த்தல், வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல் போன்ற பணிகள் மிகவும் இன்றியமையாதவைகளாகும்.
                                                                                                 மேலும், . . . . 

No comments:

Post a Comment