Friday 31 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (01-11-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (01-11-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

மராட்டிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார் விழாவில் பிரதமர் மோடி, சிவசேனா தலைவர்கள் பங்கேற்பு




மும்பை, நவம்பர், 01-11-2014,
மராட்டிய புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் 9 மந்திரிகளுக்கும் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி, அத்வானி மற்றும் சிவசேனா தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தனித்து ஆட்சி
மராட்டிய சட்டசபைக்கு கடந்த 15-ந்தேதி நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜனதா 122 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்பதால், 63 தொகுதிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்த தனது பழைய நட்பு கட்சியான சிவசேனாவுடன் கூட்டணி அரசை அமைக்க பா.ஜனதா முயற்சித்தது. ஆனால் சிவசேனா கடைசி வரை உடன்பாட்டுக்கு வரவில்லை.
இந்த நிலையில் பா.ஜனதா ஆட்சி அமைக்க வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக 41 எம்.எல்.ஏ.க்களை கைவசம் வைத்து உள்ள சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அறிவித்தது. அக்கட்சியின் ஆதரவை ஏற்பது பற்றி பா.ஜனதா முடிவு எதையும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தனித்து சிறுபான்மை அரசை அமைத்து விட்டு, பின்னர் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க பா.ஜனதா முடிவு செய்தது.
பதவி ஏற்பு விழா
இதைத் தொடர்ந்து புதிய முதல்-மந்திரியாக பா.ஜனதா சார்பில் 44 வயது தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் கடந்த செவ்வாய்க்கிழமை கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட கவர்னர், பதவி ஏற்ற 15 நாட்களுக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க தேவேந்திர பட்னாவிசுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.
                                                                                                         மேலும், . . . . 

கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறிய விவகாரம்: ஆ.ராசா, கனிமொழி மீது குற்றச்சாட்டு பதிவு சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவு

புதுடெல்லி, நவம்பர், 01-11-2014,
கலைஞர் டி.வி.க்கு முறைகேடாக ரூ.200 கோடி பண பரிமாற்றம் நடைபெற்றது தொடர்பாக மத்திய அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளு அம்மாள் உள்ளிட்ட 19 பேர் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்றதற்காக ஆதாயம் தேடித்தரும் வகையில் கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.200 கோடி முறைகேடாக பணம் வழங்கப்பட்டதாக, மத்திய அமலாக்கப் பிரிவினர் கடந்த ஏப்ரல் 25-ந் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
அதில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளுஅம்மாள், கலைஞர் டி.வி.யின் மேலாண்மை இயக்குனர் சரத்குமார் ரெட்டி, பி.அமிர்தம், சுவான் டெலிகாம் புரமோட்டர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், இந்தி திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகிய 10 தனி நபர்களின் பெயர்களும் மற்றும் சுவான் டெலிகாம், குஸேகோன் ரியல்டி,
                                                                                               மேலும், . . . .  .

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் விடுதலைக்கு வழிவகுக்கவேண்டும் மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை, நவம்பர், 01-11-2014,
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வழிவகுக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
பொய் வழக்கு
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்கி கைது செய்வதும், சிறையிலே அடைப்பதும், வதைப்பதும் தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் 2011-ம் ஆண்டு நவம்பரில் தமிழக மீனவர்கள் ஐந்து பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்கள் போதைப்பொருள் கடத்தி வந்ததாக பொய் வழக்கு தொடுத்தனர்.
அவர்கள் மீன்பிடி படகில் ஹெராயின் போதைப்பொருளை கடத்தி, நடுக்கடலில் காத்திருந்த இலங்கையை சேர்ந்த மூன்று மீனவர்களிடம் கொடுத்ததாக கூறி அவர்கள் 8 பேரையும் கைது செய்ததாக தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களும் இளைஞர்கள். 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.
                                                                                                                  மேலும், . . . . .

தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா காங்கிரஸ் மேலிடம் மீது ஞானதேசிகன் குற்றச்சாட்டு

சென்னை, நவம்பர், 01-11-2014,
தமிழ்நாடு காங்கிரஸ் பதவியில் இருந்து விலகிய ஞானதேசிகன், காங்கிரஸ் மேலிடம் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார்.
பதவி விலகல்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து பி.எஸ்.ஞானதேசிகன் விலகுவதாக நேற்று திடீரென்று அறிவித்தார். மேலும் அகில இந்திய தலைவர் சோனியாகாந்திக்கும் அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஞானதேசிகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-
                                                                                             மேலும், . . . . 

No comments:

Post a Comment