Friday 17 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (18-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (18-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் இருந்து ஜெயலலிதா இன்று விடுதலை ஆகிறார்

பெங்களூர், அக்டோபர், 18-10-2014,
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் இருந்து ஜெயலலிதா இன்று விடுதலை ஆகிறார்.
தாமதம்
சொத்து குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற்ற ஜெயலலிதா நேற்றே ஜெயிலில் இருந்து விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விடுதலை தொடர்பான நடைமுறைகள் முடிவடையாததால், அவர் நேற்று விடுதலை ஆகவில்லை. இன்று அவர் விடுதலை ஆகிறார்.
நேற்று பணி முடிந்து வழக்கமாக மாலை 5 மணிக்கு புறப்பட்டு செல்லும் தனிக்கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி.குன்கா 5.30 மணி வரை கோர்ட்டு அறையில் இருந்தார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் உத்தரவாத பத்திரம் வழங்குபவர்களும் தயாராக இருந்தனர். ஆனால் டெல்லியில் இருந்து தீர்ப்பின் நகல் வந்து சேரவில்லை. இதனால் 5.30 மணிக்கு நீதிபதி மைக்கேல் டி.குன்கா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
எனவே, ஜாமீன் நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டு, இன்று (சனிக்கிழமை) ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வருகிறார். கடந்த மாதம் 27-ந் தேதி சிறையில் அடைக்கப்பட்ட அவர் 22 நாட்களுக்கு பிறகு விடுதலையாகி அங்கிருந்து சென்னை திரும்புகிறார்.
இதேபோல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இன்று விடுதலை ஆகிறார்கள்.
இதுகுறித்து ஜெயலலிதாவின் மூத்த வக்கீல் பி.குமார் கூறியதாவது:-

ஜெயலலிதா விடுதலை தொடர்பான நடைமுறைகள் இன்னும் முடிவடையவில்லை. அதனால் அவர் நாளை (இன்று) விடுதலை ஆவார்.
                                                                                                      மேலும், . . . . .

ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது ‘எங்களுக்கு இன்றைக்கு தான் உண்மையான தீபாவளி’ போயஸ்கார்டனில் தொண்டர்கள் வெடி, வெடித்து உற்சாகம்

சென்னை, அக்டோபர், 18-10-2014,
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து போயஸ் கார்டனில் தொண்டர்கள் வெடி வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். எங்களுக்கு இன்றைக்கு தான் உண்மையான தீபாவளி என்று அவர்கள் தெரிவித்தனர்.
அம்மா தீபாவளி
சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்த தகவல் நேற்று அ.தி.மு.க.வினர் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளத்தை கரை புரள செய்தது. தங்கள் செல்போனில் இருந்து நண்பர்கள், உறவினர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
சென்னை நகர் முழுவதிலும் இருந்தும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியான செய்தி கிடைத்ததும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
தங்கள் கொண்டு வந்திருந்த பட்டாசுகளை வெடித்தனர். இதனால் எல்லா திசையிலும் பட்டாசு சத்தம் விண்ணை பிளந்தது.
                                                                                                               மேலும், . . . . .

அப்பீலில் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டால் ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர் பதவிக்கு தகுதியானவர் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேட்டி


சென்னை, அக்டோபர், 18-10-2014,
அப்பீலில் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டால் ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர் பதவிக்கு தகுதியானவர் என மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி வெங்கையாநாயுடு நேற்று ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
தகுதியானவர்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது.
                                                                                                    மேலும், . . . . 

கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை சந்திக்க ராணுவம் தயாராக இருக்கவேண்டும் முப்படை தளபதிகளின் ஆலோசனை கூட்டத்தில் மோடி பேச்சு

புதுடெல்லி, அக்டோபர், 18-10-2014,
கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை சந்திக்க ராணுவம் தயாராக இருக்கவேண்டும் என்று முப்படைத் தளபதிகளின் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
மோடி முக்கிய ஆலோசனை
பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்ட பின்பு டெல்லியில் முதல் முறையாக விமானப்படைத் தளபதி அருப் ராஹா, ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹாக், கடற்படை தளபதி ஆர்.கே.தொவான் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
டெல்லி ராணுவ தலைமையகத்தில் உள்ள ‘வார் ரூம்’ எனப்படும் போர் அறையில் இந்தக் கூட்டம் நடந்தது.
                                                                                             மேலும், . . . . .

No comments:

Post a Comment