Tuesday 21 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (22-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (22-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

தென் மாவட்டங்களில் கனமழை நீடிப்பு பழனி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 10 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு




தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பழனி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 10 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
சென்னை, அக்டோபர், 22-10-2014,
வங்க கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் நேற்று மழை இல்லாவிட்டாலும் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
தமிழக அரசு துரித நடவடிக்கை
நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பழனியில் அதிகபட்சமாக 20 செ.மீ. மழை பெய்து இருந்தது. பழனி பகுதியில் பெய்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 10 பேர் சிக்கி தவித்தனர். தகவல் அறிந்ததும் தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
                                                                                                       மேலும், . . . . 

அரியானா முதல்-மந்திரியாக மனோகர் லால் கட்டார் தேர்வு


சண்டிகார், அக்டோபர், 22-10-2014,
அரியானா முதல்-மந்திரியாக 60 வயது மனோகர்லால் கட்டார் தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடிக்கு நெருக்கமான இவர், முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.
பா.ஜனதா வெற்றி
90 தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநில சட்டசபைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜனதா முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
பா.ஜனதா சார்பில் முதல்-மந்திரி பதவிக்கு அரியானா மாநில பா.ஜனதா தலைவர் ராம்விலாஸ் சர்மா, அபிமன்யூ, பிரேம் லதா ஆகிய மூவரில் யாராவது ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முதல்-மந்திரி தேர்வு
இந்த நிலையில் முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று சண்டிகார் நகரில் நடைபெற்றது.
                                                                                                        மேலும், . . . . 

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான கொலை, ஆள் கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கையை தரவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, அக்டோபர், 22-10-2014,
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக நடந்துள்ள கொலை, ஆள்கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கையை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டு மதுரை கிளையில், ஜெய்னாப் பீவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
காணவில்லை
என் கணவர் கே.ஜமால் முகமது, கே.எம்.அலாவூதீன் ராவுத்தர் தர்ம அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக இருந்தார். இந்த அறக்கட்டளைக்கு ஏராளமாக சொத்துகள் மதுரையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 31-ந் காலையில் வீட்டில் இருந்து காரில் வெளியில் சென்ற என் கணவர் பின்னர், வீடு திரும்பவில்லை. இதையடுத்து, செப்டம்பர் 3-ந் தேதி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தேன்.
இந்த புகாரின் அடிப்படையில், ‘காணவில்லை’ என்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
நிலத்துக்காக கொலை
இதற்கிடையில், செப்டம்பர் 6 மற்றும் 7-ந் தேதிகளில் ஊடகங்களில் என் கணவர் கொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளி சங்கர், கோர்ட்டில் சரணடைந்துவிட்டதாக
                                                                                                           மேலும், . . . .  

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


சென்னை, அக்டோபர், 22-10-2014,
அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால் தென்மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த பகுதி
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 17-ந்தேதி தொடங்கியதையொட்டி, தென்மேற்கு வங்க கடலில் கடந்த சில நாட்களாகவே காற்றழுத்த தாழ்வு நிலை நிலவிவந்தது. இந்த தாழ்வு நிலையால் பரவலாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் நேற்று இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்ததால் சற்று மழை தணிந்தது. ஆனால் அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தென்மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
                                                                                                                      மேலும், . . . . 

No comments:

Post a Comment