Wednesday 15 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (16-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (16-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

 மராட்டியம், அரியானா மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு 19-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை


மராட்டியம், அரியானா மாநிலங்களில் நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இரு மாநிலங்களிலும் வருகிற 19-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மும்பை, அக்டோபர், 16-10-2014,
மராட்டியம், அரியானா மாநில சட்டசபைகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
மராட்டியத்தில் 5 முனை போட்டி
மராட்டியத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி ஏற்படாததால் ஆட்சி கவிழ்ந்து, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், அங்குள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பாரதீய ஜனதா, சிவசேனா, மராட்டிய நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டதால் இங்கு 5 முனை போட்டி நிலவியது.
4,119 வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் 4 ஆயிரத்து 119 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 276 பேர் பெண்கள்.
                                                                                                  மேலும், . . .  .

போலீஸ் நிலையத்தில் வாலிபர் சுட்டுக்கொலை நீதிபதி நேரில் விசாரணை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


ராமநாதபுரம், அக்டோபர், 16-10-2014,
ராமநாதபுரம் அருகே போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட வாலிபரின் உடல் நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் 2-வது நாளாக பதற்றம் நீடித்தது.
துப்பாக்கியால் சுட்டுக்கொலை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த வாலிபர் காட்டுவா என்ற செய்யது முகமது (வயது 21) என்பவர் விசாரணைக்காக நேற்று முன்தினம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு நடந்த விசாரணையின்போது சப்-இன்ஸ்பெக்டர் காளிதாசுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
                                                                                                       மேலும், . . . 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்த இருந்த ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கிற்கு போலீசார் ‘திடீர்’ அனுமதி மறுப்பு அனைத்து ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து போராட போவதாக அறிவிப்பு

சென்னை, அக்டோபர், 16-10-2014,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நேற்று நடத்த இருந்த ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கிற்கு போலீசார் திடீரென்று அனுமதி மறுத்தனர். அனைத்து ஜனநாயக சக்திகளுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராட போவதாக கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.
அனுமதி மறுப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் நேற்று மாலை ஊழல் எதிர்ப்பு கருத்தரங்க கூட்டம் நடைபெற இருந்தது. இந்த கூட்டத்திற்கு போலீசார் திடீரென்று அனுமதி மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து சென்னை ஓட்டேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
என்.சங்கரய்யா
இந்த கூட்டத்திற்கு பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
                                                                                                            மேலும், . . .  

திருக்கோவிலூர் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒருவர் மீது குறை சொல்லி ஆட்சிக்கு வரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு

ரிஷிவந்தியம், அக்டோபர், 16-10-2014,
ஒருவர் மீது குறையை சொல்லி ஆட்சிக்கு வர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று திருக்கோவிலூர் அருகே நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருக்கோவிலூர் அருகே உள்ள பகண்டை கூட்டு சாலையில் நடைபெற்றது. இதற்கு தே.மு.தி.க. தலைவரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான விஜயகாந்த் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் ரூ.8 லட்சத்து 36 ஆயிரத்து 730 மதிப்பில் 122 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர், சைக்கிள் மற்றும் சக்கர நாற்காலிகள் ஆகியவற்றை வழங்கி விஜயகாந்த் பேசியதாவது:-
                                                                                                                மேலும், . . .  . 


                 

No comments:

Post a Comment