Thursday 2 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (03-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (03-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

'தூய்மை இந்தியா'

புதுடில்லி, அக்டோபர், 03-10-2014,
மகாத்மா காந்தியின் கனவான 'தூய்மை இந்தியா' திட்டத்தை அவரது பிறந்த நாளான நேற்று டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அவரே வால்மீகி மந்திர், ராஜ்பாத் பகுதிகளை துடைப்பத்தால் சுத்தப்படுத்தினார்.
மோடியுடன் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இப்பணியில் ஈடுபட்டனர்.
திட்டத்தை துவக்கி வைத்து மோடி பேசியதாவது:
தேசத்தந்தை காந்தி தூய்மையான இந்தியாவை காண வேண்டும் என விரும்பினார். அதற்காக அவரது பிறந்தநாளன்று இந்த திட்டம் துவக்கப்படுகிறது.
                                                                                                        மேலும், . . .

ஜெயலலிதா யாரையும் சந்திக்க விரும்பவில்லை சிறைத்துறை டி.ஐ.ஜி., விளக்கம்

பெங்களூரு, அக்டோபர், 03-10-2014,
''சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சாதாரண 'செல்'லிலேயே உள்ளார். சொந்த உடையை அணிகிறார்.
டாக்டர்கள் ஆலோசனைப்படி தினமும் மூன்று வேளை ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது,'' என, கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா கூறினார்.
சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், கடந்த, 27ம் தேதி மாலை, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், அவரது ஜாமின் மனு, நிலுவையிலுள்ளது.
                                                                                                      மேலும், . . . . 

தீர்ப்புக்கு கருத்து சொல்ல அச்சம் வீரியம் இழக்கிறதா தி.மு.க.,?

சென்னை, அக்டோபர், 03-10-2014,
ஜெயலலிதா மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., தன் தரப்பு கருத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருப்பது, கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது, வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக, வழக்கு போடப்பட்டு, அவருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்திருக்கிறது. வழக்கை முதன் முதலில் தாக்கல் செய்தது, பா.ஜ.,வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி. என்றாலும், வழக்கை அப்போதைய தி.மு.க., அரசுதான் எடுத்து நடத்தியது. பின்னர், 2001ல் அ.தி.மு.க., மீண்டும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், தமிழகத்தில் நடந்து வந்த, இந்த வழக்கில், அரசு தரப்பும், குற்றவாளிகள் தரப்பும் ஒன்றாகி விட்டதாக, குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி, தி.மு.க., தரப்பில், வழக்கை, தமிழகத்தில் நடத்தக்கூடாது;
                                                                                                மேலும், . . . . . 

குத்தகை காலம் முடிந்தும் நிலங்கள் ஆக்கிரமிப்பு மீட்க களம் இறங்குகிறது மாநகராட்சி

சென்னை, அக்டோபர், 03-10-2014,
குத்தகை காலம் முடிந்தும், தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களை, மீட்கும் நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.
விவரம் சேகரிப்பு
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான, 541 குத்தகை நிலங்களை, 825 கிரவுண்டு பரப்பளவில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் தனியாருக்கு, பல்வேறு பயன்பாடுகளுக்காக, குத்தகைக்கு விடப்பட்டன. அதில் பல நிலங்களுக்கான குத்தகை காலம் முடிந்து நீண்ட காலமாகி விட்டது.
ஆனால், மாநகராட்சி வசம் நிலங்கள் ஒப்படைக்கப்படவில்லை. பல குத்தகை நிலங்களுக்கு, முறையாக வாடகையும் செலுத்துவதில்லை.
                                                                                                                            மேலும், . . .

No comments:

Post a Comment