Thursday 30 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (31-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (31-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை கோர்ட்டு தீர்ப்பு 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு மேல் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவு


போதைப்பொருள் கடத்தியதாக, தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.
கொழும்பு, அக்டோபர், 31-10-2014,
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி வந்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
5 தமிழக மீனவர்கள் கைது
இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவில் உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எமர்சன் (வயது 35), அகஸ்டஸ் (35), வில்சன் (40), பிரசாத் (30), லாங்லெட் (22) ஆகிய 5 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ஹெராயின் என்ற போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்ததாக கூறி 5 பேரையும் கைது செய்தனர். அவர்களுடன், இலங்கையைச் சேர்ந்த மேலும் 3 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு ஐகோர்ட்டில் வழக்கு
பின்னர் அவர்கள் 8 பேரும் இலங்கையில் உள்ள வெலிக் கடை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டனர்.
அவர்கள் மீதான வழக்கு விசாரணை கொழும்பு ஐகோர்ட்டில் நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனா முன்னிலையில் நடைபெற்று வந்தது.
                                                                                                               மேலும், . . . . 

107-வது பிறந்தநாள் விழா: முத்துராமலிங்க தேவர் உருவப்படத்துக்கு கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை



சென்னை, அக்டோபர், 31-10-2014,
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 107-வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில், தேவர் உருவப்படத்துக்கு ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தேவர் அமைப்பினர் மாலை அணிவித்தனர்.
ஜெயலலிதா மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 107-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவரின் உருவப்படத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை நந்தனம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த தேவர் உருவப்படத்துக்கு,
                                                                                                        மேலும், . . . 

கோபதாபங்கள், உறவு முறையில் தடங்கல் ஏற்பட்டாலும் ‘‘டாக்டர் ராமதாஸ் மீதான அன்பு என்றைக்கும் மறைந்தது இல்லை’’ திருமண விழாவில் கருணாநிதி பேச்சு



சென்னை, அக்டோபர், 31-10-2014,
கோபதாபங்கள், உறவு முறையில் தடங்கல் ஏற்பட்டாலும், டாக்டர் ராமதாஸ் மீதான அன்பு என்றைக்கும் மறைந்தது இல்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
திருமணம்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்-சரஸ்வதி ஆகியோரின் மகன் (டாக்டர் அன்புமணி-சவும்யா) வழி பேத்தி சம்யுக்தாவுக்கும், மகள் (ஸ்ரீகாந்தி-பரசுராமன்) வழி பேரன் ப்ரித்தீவனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்லூயன்ஸ் பாங்க்குயிட்ஸ் ரிசாட்சில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, திருமண நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி காலை 9.35 மணிக்கு அங்கு வந்தார். அவரை, டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் வரவேற்றனர்.
கருணாநிதியிடம் ஆசி
மேடைக்கு வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர். திருமணத்திற்கு வந்த அனைவரையும் முன்னாள் மத்திய மந்திரியும், தர்மபுரி தொகுதி எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி வரவேற்றார்.
அதன்பின்னர், மணமக்கள் திருமண ஒப்பந்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, மணமகன் கையில் பெற்றோர்கள் தாலியை எடுத்துக் கொடுத்தனர். மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.
அதனைத் தொடர்ந்து, மணமக்களை வாழ்த்தி தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                              மேலும், . . . . 

திருமுல்லைவாயலில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி 30 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஆவடி, அக்டோபர், 31-10-2014,
திருமுல்லைவாயலில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி 30 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இரும்பு கம்பியால் தாக்கினர்
திருமுல்லைவாயல் அண்ணாநகர் 4-வது தெருவில் வசிப்பவர் ஜெபசெல்வன்(வயது 50). அதே பகுதியில் சி.டி.எச். சாலையில் மரக்கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி அன்னலதா(42). இவர்களுக்கு அனிதா, சுவேதா என 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று காலை மகள்கள் இருவரும் பள்ளிக்கு சென்று விட்டனர். ஜெபசெல்வன் கடைக்கு சென்று விட்டார்.
                                                                                                        மேலும், . .  . .

No comments:

Post a Comment