Monday 27 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (28-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (28-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய 3 தொழில் அதிபர்கள் பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய 3 தொழில் அதிபர்கள் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
புதுடெல்லி, அக்டோபர், 28-10-2014,
சுவிட்சர்லாந்து, லிச்டென்ஸ்டெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த வக்கீலான ராம்ஜெத் மலானி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கின் அடிப்படையில் கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக மத்திய அரசு உயர்மட்ட கமிட்டி ஒன்றை அமைத்து விசாரித்து வருகிறது.
                                                                                                            மேலும், . . . . 

வடகிழக்கு பருவமழை தீவிரம் அணைகள் நிரம்பியதால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


சென்னை, அக்டோபர், 28-10-2014,
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணை உள்பட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 6 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
7 பெண்கள் காயம்
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்மாவட்ட அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. அதேசமயம் பயிர்கள் நாசம், மண் சரிவு, பாலங்கள், வீடுகள் சேதம் என ஆங்காங்கே பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி கிராமத்தில் நேற்று 2 வீடுகளில் மண் சுவர்கள் இடிந்துவிழுந்ததில் 7 பெண்கள் காயம் அடைந்தனர்.
                                                                                                 மேலும், . . . . 

சென்னையில் போலி ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது பரபரப்பு தகவல்கள்



சென்னை, அக்டோபர், 28-10-2014,
சென்னையில் போலி ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
காரில் சென்ற போதுமடக்கினார்கள்...
கோயம்பேடு, மதுரவாயல் பகுதியில் நேற்று காலை 9.30 மணி அளவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, அண்ணாநகர் துணை கமிஷனர் மனோகரன் உத்தரவிட்டார். உடனே கோயம்பேடு உதவி போலீஸ் கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், சக்திவேல் ஆகியோர் களத்தில் இறங்கி போக்குவரத்து நெரிசலை சரி செய்தபடி இருந்தனர்.
அப்போது வேகமாக கார் ஒன்று விதிமுறைக்கு மாறாக, மற்ற வாகனங்களை முந்தி சென்றது. அந்த காரை சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மடக்கினார்.
                                                                                                               மேலும், . . .  .

எத்தியோப்பியாவில் பாய்லர் வெடித்து பலியான 5 தமிழர்களின் உடல்கள் விமானம் மூலம் சென்னை வந்தன உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

ஆலந்தூர், அக்டோபர், 28-10-2014,
எத்தியோப்பியாவில் பாய்லர் வெடித்து பலியான 5 தமிழர்களின் உடல்கள் விமானம் மூலம் சென்னை வந்தது. அவர்களின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
5 பேர் பலி
எத்தியோப்பியாவில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையை மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறது. இதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர், கும்பகோணம், கடலூர், திருவாரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் வேலைக்கு சென்றனர்.
இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி சர்க்கரை ஆலையில் உள்ள பாய்லர் வெடித்ததில் தஞ்சாவூர் பாபநாசம் பகுதியை சேர்ந்த முருகானந்தம்(வயது 25), முத்துகிருஷ்ணன்(42), மயிலாடுதுறையை சேர்ந்த வேல்ராஜ்(29), திருவாரூரை சேர்ந்த தேவராஜ்(40), கடலூரை சேர்ந்த தேவேந்திரன்(34) ஆகியோர் பலியாகிவிட்டனர்.
                                                                                                மேலும், . . . . 

No comments:

Post a Comment