Monday 20 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (21-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (21-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

வங்க கடலில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் வானிலை மையம் அறிவிப்பு



வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, அக்டோபர், 21-10-2014,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17-ந் தேதி தொடங்கியது.
இதையொட்டி, சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் சென்னை உள்பட மாநிலத்தில் ஆங்காங்கே பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பருவமழையால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.
மழை நீடிக்கும்
இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
                                                                                                                       மேலும், . . . .

தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் தொடரும் மழை: அசம்பாவிதங்களைத் தடுப்பதற்கு தமிழக அரசு உஷார் நிலை பேரிடர் துறை ஊழியர்களுக்கு தீபாவளி விடுமுறை ரத்து

சென்னை, அக்டோபர், 21-10-2014,
தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் பரவலாக மழை தொடர்ந்து பெய்வதால், இயற்கை அசம்பாவிதங்களைத் தடுப்பதற்கு தமிழக அரசு உஷார் நிலையில் செயல்பட்டு வருகிறது.
சிறப்பு உத்தரவுகள்
வழக்கமாக, தமிழகத்தில் அங்கும், இங்கும் என்றுதான் மழை பெய்யும். ஆனால் காற்றழுத்த தாழ்வு நிலையாலும், வடகிழக்கு பருவகால நிலையாலும் தமிழகத்தின் பெரும்பகுதிகளில் ஒரே நேரத்தில் பெருமழை பெய்து வருகிறது.
இது இயல்பான மழைப்பொழிவு இல்லை என்பதால், வெள்ள அபாயம், மழை நீரால் வரும் பாதிப்புகள் போன்றவை யாருக்கும் ஏற்படாத வண்ணம், மக்களை பாதுகாப்பதற்காக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சிறப்பு உத்தரவுகளை உயர் அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசியபோது அவர்கள் கூறியதாவது:-
                                                                                                                  மேலும், . . . .

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அரியானா புதிய முதல்-மந்திரி இன்று தேர்வு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பெயரும் பரிசீலனை


புதுடெல்லி, அக்டோபர், 21-10-2014,
அரியானா மாநில புதிய முதல்-மந்திரி, இன்று நடைபெறும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுகிறார். மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பெயரும் முதல்-மந்திரி பதவிக்கு பரிசீலிக்கப்படுகிறது.
ஆட்சியை பிடித்தது
அரியானா மாநில சட்டசபை தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்று, தனி மெஜாரிட்டியுடன் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது.
அரியானா மாநில புதிய முதல்-மந்திரி இன்று தேர்வு செய்யப்படுகிறார். இதற்காக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில், பா.ஜனதா மேலிட பார்வையாளர்களாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு, கட்சியின் துணைத்தலைவர் தினேஷ் சர்மா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்த பிறகு, கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் கடிதத்தை சமர்ப்பிக்கப்போவதாக வெங்கையா நாயுடு தெரிவித்தார். அரியானாவில் முதல் முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அளித்த மாநில மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
உரிமை கோரலாம்
இதுகுறித்து அரியானா மாநில மூத்த பா.ஜனதா தலைவர் அனில் விஜ் கூறியதாவது:-
                                                                                             மேலும், . . .

ஜெயலலிதாவுக்கு எதிராக தி.மு.க. பொய் வழக்கு போட்டதா? கருணாநிதி விளக்கம்

சென்னை, அக்டோபர், 21-10-2014,
ஜெயலலிதாவுக்கு எதிராக தி.மு.க. பொய் வழக்கு போட்டதாக கூறப்படும் புகார் குறித்து கருணாநிதி விளக்கம் அளித்து உள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யக்கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 18.11.2003 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
அரசியல் எதிரியா?
அந்த உத்தரவில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், எஸ்.என்.வரியவாவும், எச்.கே.சீமாவும் கூறி இருப்பதாவது:-
                                                                                           மேலும், . . . . 

No comments:

Post a Comment