Friday 24 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (25-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (25-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

மேட்டூர் அருகே வனப்பகுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை கர்நாடக அதிகாரிகளை கண்டித்து சோதனை சாவடிக்கு தீவைப்பு



கொளத்தூர், அக்டோபர், 25-10-2014,
மேட்டூர் அருகே கர்நாடக வனப்பகுதியில் மாயமான தமிழக மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் கர்நாடக மாநில சோதனைச்சாவடியை தீவைத்து எரித்தனர்.
துப்பாக்கிச்சூடு
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரை அடுத்த தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் சிறு, சிறு தமிழக கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கோவிந்தபாடி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி, ராஜா, செட்டிப்பட்டியை சேர்ந்த பழனி (42) ஆகியோர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழக-கர்நாடக எல்லை அருகே கர்நாடக மாநிலத்தில் உள்ள அடிப்பாலாறு வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் வேட்டைக்கு சென்ற இவர்கள் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் ராஜாவின் காலில் 10-க்கும் மேற்பட்ட பால்ரஸ் குண்டுகள் பாய்ந்தன. அவரை கைத்தாங்கலாக தூக்கிக் கொண்டு முத்துசாமி தங்கள் சொந்த கிராமத்திற்கு வந்து விட்டார். ராஜா ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ரகசியமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் விசாரணை
ஆனால், இவர்களுடன் வேட்டைக்கு சென்ற பழனி வீடு திரும்பவில்லை.
                                                                                               மேலும், . . . . 

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மரணம் பெசன்ட்நகர் மயானத்தில் உடல் தகனம்
சென்னை, அக்டோபர், 25-10-2014,
நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.
எஸ்.எஸ்.ஆர்.
பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ரசிகர்களால் எஸ்.எஸ்.ஆர். என்று அழைக்கப்பட்டார். ஆரம்பகால தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோர் கொடி கட்டி பறந்த காலத்தில் இவரும் புகழ் பெற்ற நடிகராக விளங்கினார்.

வசனங்களை அழகு தமிழில் உச்சரிக்க கூடியவர். கதாநாயகனாக மட்டும் அல்லாமல் சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்து நடிப்பு சுடரொளியாக திகழ்ந்தார்.
ஓய்வு
1948-ம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கி 2003-ம் ஆண்டு வரை படங்களில் நடித்தார். இடையில் 1970 முதல் 1981 வரை படங்களில் நடிக்காமல் இருந்தார்.
                                                                                                               மேலும், . . . 

தமிழ்நாட்டில் மழை-வெள்ளத்தால் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிக்கு தனி அதிகாரிகள் நியமனம் தமிழக அரசு நடவடிக்கை


தமிழ்நாட்டில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை கண்காணிக்கவும், முடுக்கி விடவும் தனி அதிகாரிகளை அரசு நியமித்து உள்ளது.
சென்னை, அக்டோபர், 25-10-2014,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
வெள்ளப்பெருக்கு
குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து உள்ளது. இதனால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
தஞ்சை, நாகை, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஏராளமான ஏக்கரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.
                                                                                                      மேலும், . . . . 

குண்டும், குழியுமான சாலைகளால் வாகன ஓட்டிகள் சிரமம் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள், மேயர் ஆய்வு உடனடி நிவாரண பணிக்கு நடவடிக்கை

சென்னை, அக்டோபர், 25-10-2014,
சென்னையில் தொடர் மழையால் சாலைகள் குண்டும், குழியுமாகி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள், மேயர் ஆய்வு செய்தனர்.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கொட்டித் தீர்த்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலை, பட்டாளம் ஸ்ட்ரான்ஸ் சாலை, கெல்லீஸ் சாலை, அண்ணாநகர் சிந்தாமணி சாலை, மாதவரம் சாலை, கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை, தரமணி சர்வீஸ் சாலை உள்பட பல இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியது.
வேளச்சேரி தாசில்தார் அலுவலகத்தை சுற்றிலும் மழைநீர் குளம்போல் சூழ்ந்துள்ளது.
                                                                                                    மேலும், . . . . 

No comments:

Post a Comment