Wednesday 1 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (02-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (02-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,







கர்நாடக ஐகோர்ட்டில் உடனடியாக விசாரிக்க மறுப்பு ஜெயலலிதா ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு 7-ந் தேதி விசாரணை நடைபெறும்


விடுமுறை கால நீதிபதி விசாரிக்க மறுத்ததால், கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அந்த மனு மீது வருகிற 7-ந் தேதி விசாரணை நடைபெறும்.
பெங்களூர், அக்டோபர், 02-10-2014,
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு கடந்த சனிக்கிழமை தீர்ப்பு கூறியது.
ஜெயலலிதா ஜாமீன் மனு
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரது சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் கடந்த திங்கட்கிழமை ஜாமீன் மனு, தனிக்கோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரும் மனு, தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனு, தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனு என மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதேபோல், இந்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
                                                                                                      மேலும், . . . . 

இந்து மத தலைவர்கள் கொலை வழக்கு: போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் 15-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவு

பூந்தமல்லி, அக்டோபர், 02-10-2014,
இந்து மத தலைவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் பூந்தமல்லி கோர்ட்டில் நேற்று ஆஜரானார்கள். அவர்களை 15-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தீவிரவாதிகள் ஆஜர்
வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ், குடியாத்தத்தில் நகைக்கடை அதிபர் பஞ்சாட்சரம் கொலை உள்ளிட்ட 8 வழக்குகளில் தொடர்பு உடைய போலீஸ் பக்ருதீன், பன்னாஇஸ்மாயில், பிலால்மாலிக் ஆகிய 3 தீவிரவாதிகளையும் கடந்த ஆண்டு கைது செய்து சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீதான வழக்குகள் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
                                                                                                     மேலும், . . . . . 

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது கருணை காட்ட முடியாதது ஏன்? நீதிபதி குன்கா தீர்ப்பு விவரம்

பெங்களூர், அக்டோபர், 02-10-2014,
சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பில், ஜெயலலிதா மீது கருணை காட்ட முடியாதது ஏன் என்பது குறித்து நீதிபதி குன்கா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
சொத்து மதிப்பு
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா ஆயிரத்து 136 பக்க தீர்ப்பு அளித்தார். அவரது தீர்ப்பின் மேலும் பல பகுதிகள் வருமாறு:-
ஜெயலலிதா தனது முதல்-அமைச்சர் பதவி காலத்தை (1991-1996) தொடங்கும்போது, அவரது சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 965 ஆக இருந்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில், அவர் பங்குதாரராக இருந்த ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் சொத்துகளும் அடங்கும்.
அவரது பதவி காலத்தில், அவரது சட்டப்பூர்வ வருமானம் ரூ.9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ஆகும்.
                                                                                                     மேலும், . . . . . . 

ஆவின் பால் கலப்பட வழக்கில் மேலும் 2 பேர் கைது திருடிய பாலில் பால்கோவா தயாரித்து விற்பனை செய்ததாக பரபரப்பு தகவல்

விழுப்புரம், அக்டோபர், 02-10-2014,
ஆவின் பால் கலப்பட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் திருடிய பாலில் பால்கோவா தயாரித்து விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
ஆவின் பாலில் கலப்படம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வெள்ளிமேடுபேட்டை போலீசார் அங்குள்ள ஊரல் பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (35) என்பவரின் விவசாய நிலத்தில் திருவண்ணாமலையில் இருந்து லாரியில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அரசு ஆவின் நிறுவன பாலை சிலர் திருடி தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்து கொண்டிருந்தனர்.
ஆவின் பாலில் கலப்படம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (35), ரமேஷ் (43) உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
                                                                                                  மேலும், . . .  . .

No comments:

Post a Comment