Monday 6 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (07-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (07-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

10 நாட்களாக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? கர்நாடக ஐகோர்ட்டில் இன்று விசாரணை

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது கர்நாடக ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது. எனவே, கடந்த 10 நாட்களாக சிறையில் இருக்கும் அவருக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா? என்ற பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
பெங்களூர், அக்டோபர், 07-10-2014,
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு கூறியது.
பெங்களூர் சிறையில் ஜெயலலிதா
இதைத்தொடர்ந்து, அவர் அங்குள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதேபோல் இந்த வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அந்த சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஐகோர்ட்டில் ஜாமீன் மனு
இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் சார்பிலும் கடந்த மாதம் 29-ந் தேதி கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
                                                                                                                        மேலும், . . . . 

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சோனியா மருமகனின் நில பேரத்துக்கு அரியானா அரசு ஒப்புதல் அளிப்பதா? தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த பிரதமர் மோடி வற்புறுத்தல்

சார், அக்டோபர், 07-10-2014,
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோதிலும், சோனியா மருமகனின் நில பேரத்துக்கு அரியானா அரசு ஒப்புதல் அளித்தது பற்றி தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வற்புறுத்தினார்.
ஒப்புதல்
அரியானா மாநிலத்தில் 15-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, அங்குள்ள சார் நகரில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது:-
                                                                                                           மேலும், . . . . . 

ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தினர் உண்ணாவிரதம் அ.தி.மு.க. நிர்வாகிகளும் பங்கேற்பு


சென்னை, அக்டோபர், 07-10-2014,
ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தினர் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
உண்ணாவிரதம்
சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் தென்சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், வக்பு வாரிய தலைவருமான அ.தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார்.
                                                                                                                           மேலும், . . . . .

பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல் 5 இந்தியர்கள் பலி மத்திய அரசு கடும் எச்சரிக்கை

ஜம்மு, அக்டோபர், 07-10-2014,
பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லை ஓர கிராமங்களில் நடத்திய பீரங்கி தாக்குதலில் 5 அப்பாவிகள் பலியானார்கள். போர் நிறுத்தத்தை மீறுவதை நிறுத்திக்கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
போர் நிறுத்த மீறல்
இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் சமீபகாலமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த மாதத்தில் மட்டும் 10 தடவை போர் நிறுத்த மீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் 11-வது தடவையாக போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினர். இரவு 10 மணி அளவில், அவர்கள் தாக்குதலை தொடங்கினர்.
                                                                                                    மேலும், . . . . 

No comments:

Post a Comment