Thursday 23 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (24-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (24-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

காஷ்மீரில் தீபாவளி கொண்டாடினார், மோடி வெள்ள நிவாரணத்துக்கு ரூ.745 கோடி நிதி அறிவிப்பு

ஸ்ரீநகர், அக்டோபர், 24-10-2014,
காஷ்மீரில் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். வெள்ள நிவாரணத்துக்கு ரூ.745 கோடி நிதி அறிவித்தார்.
ஒரு நாள் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளத்தால் பெரும்பாதிப்புக்கு ஆளான காஷ்மீர் மக்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி நேற்று அவர் காஷ்மீருக்கு ஒரு நாள் பயணமாக சென்றார்.
முதலில் அவர் உலகிலேயே மிகவும் உயரமான போர்க்களம் என்று கருதப்படுகிற சியாச்சின் பனிமலைப் பிரதேசத்துக்கு சென்றார். இது முன் அறிவிப்பு வெளியிடாத திடீர் பயணம் ஆகும். அங்கு அவர் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மத்தியில் தீபாவளியை கொண்டாடி, அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிற வகையில் பேசினார்.
முதல் தீபாவளி
அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் பதவி ஏற்ற பின்னர் எனது முதல் தீபாவளியை உங்களோடு கொண்டாட வந்திருக்கிறேன். உங்களோடு நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
                                                                                          மேலும், . . . . . 

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அணைகள் வேகமாக நிரம்புகின்றன பல இடங்களில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின






தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால், அணைகள் மற்றும் ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பல இடங்களில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
சென்னை, அக்டோபர், 24-10-2014,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.
பருவமழை தீவிரம்
இதனால் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்து உள்ளது.
தீபாவளி அன்று சற்று ஓய்ந்திருந்த மழை மீண்டும் பெய்யத்தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
                                                                                                                                மேலும், . . . . 

சென்னை விருகம்பாக்கத்தில் பயங்கரம் அடகு கடை அதிபர் படுகொலை-நகைகள் கொள்ளை மர்ம ஆசாமிகள் தப்பி ஓட்டம்



சென்னை, அக்டோபர், 24-10-2014,
சென்னை விருகம்பாக்கத்தில் அடகுகடை அதிபர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அடகு கடையில் இருந்த தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன.
ஹீராராம்
சென்னை விருகம்பாக்கம், ஆற்காடு ரோட்டில், வேம்புலி அம்மன் கோவில் அருகே, ஆனந்த் பேங்கர்ஸ், என்ற பெயரில் தங்க நகைகள் அடகு பிடிக்கும் அடகு கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் பெயர் ஹீராராம் (வயது 54). இவர் அதே பகுதியில், மேற்கு கே.கே.நகர், புது பங்காரு காலனியில் குடும்பத்துடன் வசித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹீராராம், நீண்ட காலமாக அந்த பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். அவருக்கு ஆனந்த் (23) என்ற மகன் உள்ளார். ஆனந்த் சி.ஏ.படித்து வருகிறார். திருமணமான 2 மகள்களும் இருக்கிறார்கள். மனைவி உடல் நிலை சரி இல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்.
தீபாவளி நாளில்...
நேற்று முன்தினம் தீபாவளி நாளில், ஹீராராம், அடகு கடையை திறந்து வைத்திருந்தார்.
                                                                                         மேலும், . . . .  .

அணைக்கட்டு அருகே விபத்து மினிலாரி பள்ளத்தில் கவிழ்ந்து 7 பேர் பலி துக்க வீட்டுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்




அணைக்கட்டு, அக்டோபர், 24-10-2014,
துக்க வீட்டுக்கு சென்றபோது மினிலாரி பள்ளத்தில் கவிழ்ந்து 3 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 35 பேர் படுகாயம் அடைந்தனர்.
மினி லாரியில்...
வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 60), ஓய்வு பெற்ற கிராம சிப்பந்தி. இவர் மரணம் அடைந்தார்.
அதைத்தொடர்ந்து பேரணாம்பட்டை அடுத்த பல்லாலகுப்பம் கிராமத்தை சேர்ந்த முனுசாமியின் உறவினர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் ஒரு வாகனத்தில் வரதலம்பட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக நேற்று காலை புறப்பட்டு சென்றனர். வழியில் அந்த வாகனம் திடீரென பழுதானது.
                                                                                                                   மேலும், . . . . 

No comments:

Post a Comment