Sunday 26 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (27-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (27-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

பிரதமர் இல்லத்தில் தேநீர் விருந்து ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் மோடி ஆலோசனை அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வலியுறுத்தல்


ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.
புதுடெல்லி, அக்டோபர், 27-10-2014,
பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணிஅரசு கடந்த மே மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றது.
எம்.பி.க்களுக்கு தேநீர் விருந்து
மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு அமைந்து 5 மாதங்கள் முடிவு அடைந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விருந்து வழங்க முடிவு செய்தார்.
இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் எண்.7, ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் செய்யப்பட்டன.
                                                                                                      மேலும், . . . . 

குறைந்த கட்டணம் ரூ.8, அதிகபட்ச கட்டணம் ரூ.23 பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது


சென்னை, அக்டோபர், 27-10-2014,
சென்னையில் பொங்கல் பண்டிகை முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கபட இருக்கிறது. குறைந்த கட்டணம் ரூ.8-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.23-ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
மெட்ரோ ரெயில் சேவை
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கான பறக்கும் பாதையில் ரெயில் சேவையை தொடங்குவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இந்த பாதையில் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
அடுத்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க உள்ளார்.
                                                                                            மேலும், . . . . 

பால் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் சென்னையில் நாளை நடக்கிறது


சென்னை, அக்டோபர், 27-10-2014,
பால் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி, சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பால் விலை உயர்வு
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில், மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் ஒரு லிட்டர் பாலுக்கு ஒரேயடியாக 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை, எந்த அரசும் பால் விலையை இந்த அளவுக்கு உயர்த்தவில்லை.
கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு அதள பாதாளத்திற்கு சென்று விட்டதால்தான் தற்போது விலை உயர்த்தப்படுகிறது என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
                                                                                                       மேலும், . . . . 

ராஜபாளையம் அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 200 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்


ராஜபாளையம், அக்டோபர், 27-10-2014,
மழை காரணமாக ராஜபாளையம் அருகே அய்யனார் கோவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 200 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
பருவமழை தீவிரம்
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தண்ணீர் வரத்து அதிகரித்து பல்வேறு அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக அடிவார பகுதியில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
வெள்ளத்தில்200 பேர் சிக்கினர்
அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
                                                                                                              மேலும், . . . 

No comments:

Post a Comment