Friday 10 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (11-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (11-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை தாமதம் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது

புதுடெல்லி, அக்டோபர், 11-10-2014,
சுப்ரீம் கோர்ட்டில், ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்று தெரிகிறது.
கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைவரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா மற்றும் 3 பேர் தரப்பில் ஜாமீன் விடுதலை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை கடந்த 7-ந் தேதி நீதிபதி சந்திரசேகர் விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு
இதையடுத்து ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
                                                                                          மேலும், . . .  .

நோபல் பரிசை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் கைலாஷ் சத்யார்த்தி பேட்டி

புதுடெல்லி, அக்டோபர், 11-10-2014,
நோபல் பரிசை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கைலாஷ் சத்யார்த்தி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்தியருக்கு நோபல் பரிசு
2014-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கு கிடைத்துள்ளது. அவர் இந்த விருதை பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுடன் சேர்ந்து பெறுகிறார்.
தெற்கு டெல்லியில் வசிக்கும் கைலாஷ் சத்யார்த்திக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ள தகவல் கிடைத்ததும் அவருடைய அடுக்குமாடி குடியிருப்புக்கு செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் நேற்று படையெடுத்தனர். அப்போது கைலாஷ் மும்முரமாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்.
எதிர்பார்க்கவில்லை
செய்தியாளர்களைக் கண்டதும், அவருடைய மனைவி சுமேதா நிருபர்களிடம் மகிழ்ச்சி பொங்க கூறுகையில்,
                                                                                                     மேலும், . . . . 

பிரதமர் மோடியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் குறைந்தது

ஜம்மு, அக்டோபர், 11-10-2014,
எல்லையில் தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான், மோடியின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக வன்முறையில் ஈடுபடவில்லை. இதனால் எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி நிலவுகிறது.
பாகிஸ்தான் அத்துமீறல்
காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள சர்வதேச எல்லைக் கோடு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்ததத்தை மீறி இந்தியா எல்லைக்குகள் சரமாரியாக தாக்குதல் நடத்தி வந்தது.
ஜம்மு, பூஞ்ச், சம்பா, கதுரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 130-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களையும், 60-க்கும் மேலான எல்லை பாதுகாப்பு படையின் நிலைகளையும் நோக்கி கடந்த 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தானியங்கி ஆயுதங்களையும்,
சிறிய மோர்ட்டார் ரக பீரங்கிகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியது. சுமார் 35 தடவை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இப்படி தாக்குதலை மேற்கொண்டது.
                                                                                            மேலும், . . . . 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை புதிய அறிக்கை: சசி தரூர் மனைவி சுனந்தா மரணத்தில் மர்ம முடிச்சு வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்படுமா?

புதுடெல்லி, அக்டோபர், 11-10-2014,
முன்னாள் மத்திய மந்திரி சசி தரூர் மனைவி சுனந்தா மரணம் தொடர்பாக புதிய அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அளித்துள்ளது. ஆனால் அவரது மரணத்தில் மர்ம முடிச்சு இன்னும் அவிழவில்லை. வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
குடும்ப வாழ்வில் குழப்பம்
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் (வயது 58), 2 முறை திருமணமாகி விவாக ரத்தான நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை (52) கடந்த 2010-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ந்தேதி காதல் மணம் செய்தார்.
ஆனால் திடீரென சசிதரூருடன், பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் இணைத்து பேசப்பட்டார்.
                                                                                           மேலும், . . . 

No comments:

Post a Comment