Monday 13 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (14-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (14-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

சென்னை வேளச்சேரியில் பரிதாபம் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறி கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி குடிபோதையில் காரை ஓட்டி வந்த 2 பேர் கைது



ஆலந்தூர், அக்டோபர், 14-10-2014,
சென்னை வேளச்சேரியில் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்று நடைபாதையில் ஏற்றியதால் அங்கு தூங்கிக் கொண்டு இருந்த கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியானார்கள்.
இது தொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நடைபாதையில் மோதிய கார்
சென்னை வேளச்சேரி விஜயநகரில் இருந்து தரமணி செல்லும் 100 அடி சாலையில் உள்ள நடைபாதைகளில் இரவு நேரங்களில் கூலித்தொழிலாளிகள் அதிக அளவில் படுத்து தூங்குகின்றனர். நேற்று முன்தினம் இரவு வேளச்சேரி-தரமணி பாரதி நகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள நடைபாதையில் கூலித்தொழிலாளிகள் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
நள்ளிரவு 1 மணியளவில் ஒரு கார் அதிவேகமாக தாறுமாறாக வந்து நடைபாதையில் தூங்கியவர்கள் மீது ஏறி சிறிது தூரம் சென்று நின்றது.
                                                                                                              மேலும், . . . 

3 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு


போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.
சென்னை, அக்டோபர், 14-10-2014,
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை
“உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன். வாழ்த்துக் குரியவன். அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையோடச் செய்வதாகும்” என்றார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப, உழைப்பாளியை ஊக்குவிக்கும் வகையில், ஊதிய உயர்வு, போனஸ், கருணைத்தொகை, ஊக்கத்தொகை என பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய பெருமைக்குரியவர் ஜெயலலிதா.
                                                                                               மேலும், . . . . .

‘ஹூட் ஹூட்’ புயல் பாதிப்பு: ஆந்திராவுக்கு ரூ.5 கோடி நிதி உதவி முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு


சென்னை, அக்டோபர், 14-10-2014,
‘ஹூட் ஹூட்’ புயல் பாதிப்பால், ஆந்திரா அரசுக்கு ரூ.5 கோடி நிதி உதவியும், மின்சார உபகரணங்களும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இயற்கை சீற்றங்களால்...
இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்குவதிலும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான உதவிகளை செய்வதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருட்களை அளிப்பதிலும் பிறமாநிலங்களுக்கு வழிகாட்டியாக விளங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு என்று சொன்னால் அது மிகையாகாது.
அண்மையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அந்த மாநில மக்களுக்காக 5 கோடி ரூபாய் நிவாரண உதவியை கேட்காமலேயே வழங்கியவர் ஜெயலலிதா.
                                                                                           மேலும், . . . . 

சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீது 17-ந்தேதி விசாரணை

புதுடெல்லி, அக்டோபர், 14-10-2014,
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 17-ந்தேதி நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
தனிக்கோர்ட்டு தீர்ப்பு
பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த செப்டம்பர் 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவும் மற்றும் 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
                                                                                                           மேலும், . . . . 

No comments:

Post a Comment