Saturday 4 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (05-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (05-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்போம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? நரேந்திர மோடி மீது சோனியா காந்தி தாக்கு

மேஹம், அக்டோபர், 05-10-2014,
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை 100 நாட்களில் மீட்டு வருவோம் என்ற வாக்குறுதி என்னஆனது? என்று பிரதமர் நரேந்திரமோடி மீது சோனியா காந்தி தாக்குதல் தொடுத்தார்.
மோடி-சோனியா பிரசாரம்
அரியானா மாநிலத்தில் 15-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்கு பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர், காங்கிரஸ் 60 ஆண்டுகால ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.
பிரதமர் பிரசாரம் செய்த ஒரு மணி நேரத்தில் அந்த மாநிலத்தில் மேஹம் என்ற இடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
                                                                                                           மேலும், . . . . 

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் ஊழல்வாதிகள் மராட்டிய தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கடும் தாக்கு
மும்பை, அக்டோபர், 05-10-2014,
மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தேசியவாதிகள் அல்ல, ஊழல்வாதிகள் என்று கடுமையாக தாக்கி பேசினார்.
மராட்டிய சட்டசபை தேர்தல்
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு வருகிற 15-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி மராட்டியத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதியம் தனது பிரசாரத்தை தொடங்கினார்.
பீட்டில் உள்ள அடல்ஜி மைதானத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், அந்த மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்தும், பீட் பாராளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பிரீத்தம் முண்டேயை ஆதரித்தும் பிரசாரம் செய்தார்.
பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
                                                                                                                            மேலும், . . . . 

ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம் 2 தொண்டர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சென்னை, அக்டோபர், 05-10-2014,
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து நேற்று சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
போராட்டத்திற்கு இடையே அ.தி.மு.க. தொண்டர்கள் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கருப்பு சட்டையுடன் உண்ணாவிரதம்
சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
                                                                                                           மேலும், . . . . .

மரக்காணம் அருகே கல்லூரி மாணவி எரித்துக் கொலையா? காதலனிடம் விசாரணை

மரக்காணம், அக்டோபர், 05-10-2014,
மரக்காணம் அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் தீயில் கருகி பிணமாக கிடந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகத்தின் பேரில் அவரது காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த அனுமந்தை பஜனை கோவில் தெருவை சேர்ந்த சகாதேவன் என்பவரது மகள் சித்ரா (வயது 20). இவர் புதுவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்துவந்தார்.
கடந்த வியாழக்கிழமை சித்ரா வீட்டில் தனியாக இருந்தார். அவரது தாய் அஞ்சலை வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்தபோது வீடு திறந்து கிடந்தது.
                                                                                            மேலும்,. . . . .

No comments:

Post a Comment