Friday 3 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (04-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (04-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

பீகாரில் பரிதாபம்: தசரா விழா நெரிசலில் சிக்கி 32 பேர் பலி

பாட்னா, அக்டோபர், 04-10-2014,
பீகாரில் தசரா விழா நெரிசலில் சிக்கி 32 பேர் பலியானார்கள்.
உருவ பொம்மை எரிப்பு
தசரா பண்டிகையை முன்னிட்டு, ‘ராவண வதம்’ என்ற பெயரில், ராவணனின் பிரமாண்ட உருவ பொம்மை எரிக்கும் நிகழ்ச்சி, நேற்று வட மாநிலங்களில் நடைபெற்றது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒரே மேடையில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெரிசல்
பீகார் மாநில தலைநகர் பாட்னாவிலும், உருவ பொம்மை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. அதைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து இருந்தனர். முதல்-மந்திரி ஜிதன் ராம் மஞ்சியும் கலந்து கொண்டு பார்த்தார்.
மைதானத்தில், ராவணன், மேகநாதன், கும்பகர்ணன் ஆகியோரின் 60 அடி உயர பிரமாண்ட உருவ பொம்மைகள் நிறுத்தப்பட்டு இருந்தன.
                                                                                                                   மேலும், . . . .

விஜயதசமி நாளில், முதன்முதலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, வானொலி மூலம் பேச்சு “அனைவரும் கதர் துணி வாங்க வேண்டும்”
புதுடெல்லி, அக்டோபர், 04-10-2014,
விஜய தசமி நாளில் பிரதமர் மோடி, முதன் முதலாக நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் உரை ஆற்றினார். அப்போது அவர், “நாம் ஒரு அடி முன்னேறினால் நாடு 125 கோடி அடி முன்னேறும்” என்றும், அனைவரும் கதர் துணி வாங்க வேண்டும் என்றும் கூறினார்.
வானொலியில் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதன் முதலாக அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                                                        மேலும், . . . 

விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு ஏடு தொடக்கம்


சென்னை, அக்டோபர், 04-10-2014,
விஜயதசமியை முன்னிட்டு சென்னையில் உள்ள மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில் உள்பட பெரும்பாலான கோவில்களிலும் குழந்தைகளுக்கு அரிசியில் அட்சரம் எழுதியும், நாக்கில் தங்கமோதிரத்தால் ‘‘ஓம்’’ என்று எழுதியும் ஏடு தொடங்கப்பட்டது.
குழந்தைகளுக்கு ஏடு தொடக்கம்
நவராத்திரியின் 10-வது நாளான விஜயதசமி வெற்றி நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் எந்த செயல் தொடங்கினாலும் அது வெற்றியில் தான் முடியும் என்பது நம்பிக்கையாகும். குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க உகந்த நாள் என்பதால், பள்ளியில் புதிதாக சேர்க்க இருக்கும் குழந்தைகளுக்கு விஜயதசமியை முன்னிட்டு நேற்று சென்னையில் உள்ள கோவில்களில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் நேற்று காலையிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏடு தொடங்குவதற்காக திரண்டனர்.
                                                                                                      மேலும், . . . . . 

நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சொத்துக்குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் மாற்றியது - கருணாநிதி அறிக்கை

சென்னை, அக்டோபர், 04-10-2014,
நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சொத்துக்குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் மாற்றியது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வழக்கு மாற்றம் ஏன்?
கேள்வி:-முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் வேறு ஏதாவது உண்டா?
                                                                                                                         மேலும், . . . . . 

No comments:

Post a Comment