Sunday 19 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (19-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (19-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

அரியானாவில் ஆட்சியை கைப்பற்றுகிறது பா.ஜனதா, மராட்டியத்தில் முன்னிலை
அரியானா சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதியில் முன்னிலை வகிக்கும் பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றுகிறது.
மோடியின் அலையில் பயணம் செய்யும் பாரதீய ஜனதா கட்சி இன்று மராட்டியத்தில் ஒரு தனிப்பெரும் கட்சியாக வளர்ந்துள்ளது. அதிகமான தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது. அரியானாவில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுகிறது. பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் பரீட்சையாக அமைந்த இந்த தேர்தலிகளில் பாரதீய ஜனதா வெற்றியையே எட்டியுள்ளது.
                                                                                                         மேலும், . . . . 

பா.ஜனதா முன்னிலை மோடியின் நல்லாட்சியை அடையாளப்படுத்துகிறது பிரகாஷ் ஜவதேகர்
மராட்டியம் அரியானா சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
பாரதீய ஜனதா அதிக தொகுதியில் முன்னிலை பெற்ற செய்தியை அடுத்து டெல்லியில் பாரதீய ஜனதா அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர்.
                                                                                                   மேலும் , . . . . .

பரப்பன அக்ரஹாரா முதல் போயஸ் கார்டன் வரை ...


சென்னை, அக்டோபர், 19-10-2014,
சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையாகி சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்து சேர்ந்தார்.
அதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-
* காலை 10.10 மணி: சிறையில் இருந்து ஜெயலலிதா விடுதலையாவதையொட்டி, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் இனிப்புகளுடன் காத்து இருந்தனர்.
* 10.15 மணி: சிறை வளாகத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
* 11 மணி: பெங்களூர் தனிக்கோர்ட்டு கூடியதும் நீதிபதி மைக்கேல் டி.குன்காவிடம், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் நகல் அளிக்கப்பட்டது.
* 11.14 மணி: முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் பரப்பன அக்ரஹாரா கோர்ட்டு வளாகத்துக்கு வந்தார்.
                                                                                                                  மேலும், , , , , 

ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை


பெங்களூர் சிறையில் இருந்து 22 நாட்களுக்கு பிறகு நேற்று விடுதலையான ஜெயலலிதா தனி விமானத்தில் சென்னை திரும்பினார். விமான நிலையம் முதல் போயஸ் கார்டன் இல்லம் வரை கொட்டும் மழையிலும் பல்லாயிரக் கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை, அக்டோபர், 19-10-2014,
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக் கப்பட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த மாதம் 27-ந் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன்
ஜெயலலிதாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்ததால் கடந்த 9-ந் தேதி அவரது சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்தது. மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை யும் நிறுத்திவைத்த நீதிபதிகள், கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெறும் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை தாமதப்படுத்தக்கூடாது என்றும், வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் டிசம்பர் 18-ந் தேதிக் குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதேபோல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் நீதிபதிகள் ஜாமீன் வழங்கினார்கள்.
                                                                                             மேலும், . . .

No comments:

Post a Comment