Wednesday 29 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

கருப்பு பணம் பதுக்கல் விவகாரம் வெளிநாட்டு வங்கியில் கணக்கு வைத்துள்ள 627 பேர் பெயர் பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்

கருப்பு பணம் பதுக்கல் தொடர்பான வழக்கில், வெளிநாட்டு வங்கியில் கணக்கு வைத்துள்ள 627 பேர் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
புதுடெல்லி, அக்டோபர், 30-10-2014,
சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்களில் பலர் முறைகேடாக பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
இந்த பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
பெயர்கள் வெளியீடு
இவ்வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
                                                                                                          மேலும், . . . 

இலங்கையில் இந்திய வம்சாவளி தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சோகம் தேயிலை தோட்ட நிலச்சரிவில் 200 பேர் பலி? மீட்புப் பணியில் ராணுவம் தீவிரம்



கொழும்பு, அக்டோபர், 30-10-2014,
இலங்கை தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் சுமார் 200 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. உடல்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள்
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 218 கிலோ மீட்டருக்கு கிழக்கே படுல்லா மாவட்டம் உள்ளது. மலைப்பாங்கான இந்த மாவட்டத்தில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த தொழிலாளர்களின் வீடுகள் அந்த தேயிலை தோட்டங்களின் அடிவாரத்தில் அமைந்துள்ளன.
                                                                                                   மேலும், . . . . 

அனுமதியின்றி பள்ளிக் கட்டிடத்தை திறக்க முயன்ற தே.மு.தி.க. எம்.எல்.ஏ. உட்பட 200 பேர் கைது சாலிகிராமத்தில் பரபரப்பு

பூந்தமல்லி, அக்டோபர், 30-10-2014,
சாலிகிராமத்தில் உரிய அனுமதியின்றி பள்ளி கட்டிடத்தை திறக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ. உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிய கட்டிடம்
விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமத்தில் ஜெயகோபால் கரோடியா பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக தே.மு.தி.க.வைச் சேர்ந்த பார்த்தசாரதி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 15 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.
அனுமதி மறுப்பு
கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த பள்ளியின் கட்டிட திறப்பு விழா நேற்று காலை நடைபெற
                                                                                                   மேலும், . . . . 

மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர் கருணாநிதி அறிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

சென்னை, அக்டோபர், 30-10-2014,
மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள், அதிகாரிகள் பார்வையிட்டு, தக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கருணாநிதியின் அறிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர்கள் ஆறுதல் தெரிவித்தனர்
தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில், அமைச்சர்களோ, அதிகாரிகளோ வெள்ளப் பகுதிகளை பார்வையிடவில்லை என்று கூறி இருக்கிறார். மழையினால் பாதிக்கப்பட்டுள்ள 20 மாவட்டங்களுக்கு உயர் அதிகாரிகள் அனுப்பப்பட்டு, அவர்கள் அங்குள்ள வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு, அங்கு நடைபெற்ற மீட்பு, பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் உன்னிப்பாக கவனித்தனர்.
ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை காரணமாகத்தான் திண்டுக்கல் மாவட்டம் காளிப்பட்டியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 10 நபர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர். அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
                                                                                                   மேலும், . . . .  .

No comments:

Post a Comment