Thursday 9 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (10-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (10-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

எல்லையில் அத்துமீறி தாக்குதல் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை ‘அடாவடித்தனம் நீடித்தால் தாங்க முடியாத விலை கொடுக்க நேரிடும்’

புதுடெல்லி, அக்டோபர், 10-10-2014,
“எல்லையில் அடாவடித்தனம் நீடித்தால் தாங்கிக் கொள்ள முடியாத விலை கொடுக்க நேரிடும்” என்று பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பாக்.ராணுவம் தாக்குதல்
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோரத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
192 கிலோ மீட்டர் நீள எல்லைப்பகுதியில் இந்த தாக்குதல் நீடிக்கிறது. இந்த தாக்குதலால் சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள ராநகர், ராம்கார், அர்னியா, ஆர்.எஸ்.புரா, கனாசக், பர்வால் ஆகிய பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. எல்லைப்பாதுகாப்பு படையினரின் 60 பாதுகாப்பு நிலைகள் சேதம் அடைந்து உள்ளன. 130 எல்லையோர கிராமங்கள் தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ளன. அந்த கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கடந்த 1-ந் தேதி முதல் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் பாதுகாப்பு படையினர் 9 பேர் உள்பட 80-க்கும் அதிகமான பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள்.
                                                                                                                      மேலும், . . . 

இன்று அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரும் சுப்ரீம்கோர்ட்டில் ஜெயலலிதா ஜாமீன் மனு வயது, உடல்நிலையை கருத்தில் கொண்டு விடுதலை செய்ய கோரிக்கை

உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று அல்லது செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி, அக்டோபர், 10-10-2014,
பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜெயலலிதா ஜாமீன் மனு
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன், ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், தலா ரூ.10 கோடியும் அபராதம்
                                                                                                மேலும், . . . . 

செல்போன் மூலம் பெண் குரலில் பேசி ‘‘கேலி செய்ததால் 3 பேரை சுட்டுக் கொன்றேன்’’ கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்புப்படை வீரர் வாக்குமூலம்

கல்பாக்கம், அக்டோபர், 10-10-2014,
தினமும் செல்போன் மூலம் பெண் குரலில் பேசி கேலியும் கிண்டலும் செய்ததால் 3 அதிகாரிகளை சுட்டு கொன்றதாக, கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்புப் படை வீரர் வாக்குமூலம் அளித்தார்.
3 வீரர்கள் சுட்டுக்கொலை
காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே சதுரங்கப்பட்டினம் கடற்கரை பகுதியில் மத்திய அரசின் அணுசக்தி துறை சார்பிலான சென்னை அணுமின்நிலையம், இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மையம் ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களில், மத்திய தொழிற்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கான குடியிருப்பு கல்பாக்கத்திலும், அணுபுரம் கிராமத்திலும் உள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4.50 மணியளவில் கல்பாக்கம் ஊழியர் குடியிருப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஏட்டு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோகன்சிங் (வயது 57) ஓய்வாக இருந்தார். அவரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த விஜய் பிரதாப்சிங் (52) என்ற வீரர் தான் வைத்திருந்த நவீன ரக துப்பாக்கியால் சுட்டு கொன்றார். சத்தம் கேட்டு அவரை பிடிக்க வந்த சேலம் மாவட்டம் தளவாய்பட்டியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் (58), மதுரை மாவட்டம் சின்னரெட்டி பாளையத்தை சேர்ந்த ஏட்டு சுப்புராஜ் (57) ஆகியோரையும் விஜய்பிரதாப்சிங் அதே துப்பாக்கியால் சுட்டார். இதில் அந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அஞ்சலி
மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப்சிங் (57) வயிற்றில் குண்டு காயம் அடைந்தார்.
                                                                                                               மேலும், . . . 

பிரபலங்களுடன் சல்லாபம் செய்து மிரட்டி பணம் பறித்ததாக நடிகை கைது 10 நாள் காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

பெங்களூர், அக்டோபர், 10-10-2014,
பிரபலங்களுடன் சல்லாபம் செய்து, மிரட்டி பணம் பறித்ததாக கன்னட நடிகை கைது செய்யப்பட்டார். அவரை 10 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கன்னட நடிகை நயனா
கன்னட நடிகை நயனா கிருஷ்ணா. பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்த அவர், ‘கோட்லலாப்போ காய்’ என்ற கன்னடப்படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்தார். ஆனால் இந்தப் படம் வெற்றி அடையவில்லை. புதிய படங்கள் வந்து சேராத நிலையில், வசதியான வாழ்க்கை வாழ்வதற்கு திட்டமிட்டதாக தெரிகிறது.
இதற்காக அவர் சக நடிகைகளும் தனது தோழிகளுமான ரிஹானா, மேகனா மற்றும் ஹேமந்த் குமார், சுனில் குமார், மல்லேஷ், ரகு உள்ளிட்டவர்களுடன் கூடி ஆலோசனை நடத்தி, திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
சதித்திட்டம்
அதாவது, டாக்டர்கள், என்ஜினீயர்கள், தொழில் அதிபர்கள் என பல்வேறு துறை பிரபலங்களை நாடுவது, அவர்களுக்கு நடிகைகளை காட்டி வலை வீசுவது, அவர்கள் சல்லாபத்தில் ஈடுபடுகிறபோது அதை ரகசியமாக படம் எடுப்பது, பின்னர் அந்தப் படத்தை வெளியிடப்போவதாக சம்பந்தப்பட்ட நபரை மிரட்டி லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் ஆளுக்கேற்ப பணம் பறிப்பது என்பதே திட்டம்.
இந்த திட்டத்தை அவர்கள் ஓசைப்படாமல் அரங்கேற்றி வந்துள்ளனர்.
                                                                                                              மேலும், . . . 

No comments:

Post a Comment