Monday 13 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (13-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (13-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று ஆந்திராவை புயல் தாக்கியது விசாகப்பட்டினம் நகரில் பலத்த சேதம்


வங்க கடலில் மையம் கொண்டிருந்த புயல் நேற்று ஆந்திராவை தாக்கியது. அப்போது பலத்த மழையுடன் மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. புயலின் தாக்குதலில் விசாகப்பட்டினம் நகரில் பலத்த சேதம் ஏற்பட்டது.
புதுடெல்லி, அக்டோபர், 13-10-2014,
வங்க கடலில் அந்தமான் அருகே சமீபத்தில் உருவான ‘ஹூட் ஹூட்’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அந்த புயல் மேலும் வலுவடைந்து ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது. நேற்று முற்பகல் புயல் கரையை கடக்கும் என்றும், அப்போது பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இதனால் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
                                                                                                                 மேலும், . . . 

மராட்டியம், அரியானாவில் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது 15-ந் தேதி ஓட்டுப்பதிவு

மும்பை, அக்டோபர், 13-10-2014,
மராட்டியம், அரியானா மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. இந்த 2 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக 15-ந் தேதி (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.
சட்டசபை தேர்தல்
மராட்டியம், அரியானா மாநில சட்டசபைகளுக்கு 15-ந் தேதி (புதன்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. மராட்டியத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
இதேபோல் அரியானா மாநிலத்தின் 90 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது.
முற்றிலும் வித்தியாசமானது
மராட்டியத்தில் இந்த முறை நடைபெறும் சட்டசபை தேர்தல் முற்றிலும் வித்தியாசமானது.
                                                                                                 மேலும், . . . 

செக்ஸ் வீடியோ விவகாரம்: நிதி நிறுவன அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு செல்போன் கடைக்காரர் பேரம் புகார் கூறிய பெண்களிடம் போலீசார் விசாரணை

தர்மபுரி, அக்டோபர், 13-10-2014,
செக்ஸ் வீடியோ விவகாரம் தொடர்பாக நிதி நிறுவன அதிபரிடம் ரூ.15 லட்சம் கேட்டு செல்போன் கடைக்காரர் பேரம் பேசியது அம்பலமானது. நிதி நிறுவன அதிபர் மீது புகார் கூறிய பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண்களுடன் உல்லாசம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மேலத்தெருவை சேர்ந்தவர் சிவராஜ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். நிதி நிறுவனம் நடத்தி வந்த சிவராஜ் தன்னிடம் கடன் வாங்க வரும் பெண்களை மயக்கியும், மிரட்டியும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. உல்லாசமாக இருப்பதற்காக பாலக்கோடு அருகே உள்ள குப்பைகொட்டாயில் உள்ள தனது பண்ணை வீட்டை சிவராஜ் பயன்படுத்தி வந்துள்ளார்.
அங்கு பெண்களை அழைத்து வரும் சிவராஜ் தனது விலை உயர்ந்த செல்போன் கேமராவில் அவர்களுக்கு தெரியாமல், உல்லாசமாக இருக்கும் ஆபாச காட்சிகளை வீடியோ எடுத்துள்ளார்.
                                                                                               மேலும், . . . . 

போர் நடந்த பகுதிக்கு ராஜபக்சே வருகை வெளிநாட்டவருக்கு இலங்கை ராணுவம் தடை


கொழும்பு, அக்டோபர், 13-10-2014,
இலங்கையில் விடுதலை புலிகளுடன் அந்நாட்டு ராணுவம் போர் நடத்திய இடத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதை முன்னிட்டு அப்பகுதிக்கு வெளிநாட்டவர்கள் வருகைக்கு தடை விதித்துள்ளது ராணுவம்.இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தான் விடுதலை புலிகளுடன் போர் நடந்தது. அந்த இடத்திற்கு வெளிநாட்டவர்கள் வருகை அதிகளவில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் வடக்கு மாகணத்திற்குட்பட்ட ஓமந்தாய் என்ற இடத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே, பொது தேர்தலை முன்னிட்டு அப்பகுதியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகின்றார்.
                                                                                                            மேலும், . . . . 

No comments:

Post a Comment