Tuesday 7 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (08-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (08-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக ஐகோர்ட்டு மறுப்பு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
பெங்களூர், அக்டோபர், 08-10-2014,
பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஜாமீன் மனு
இந்த நிலையில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதுதவிர மேல் முறையீட்டு தொடர்பாகவும், தீர்ப்பை ரத்து செய்யக்கோரி யும், தண்டனையை நிறுத்தி வைக்க வலியுறுத்தியும், சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று கோரியும் தனித்தனியாக 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த 29-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் கர்நாடக ஐகோர்ட்டில் விடுமுறைகால நீதிபதி ரத்தினகலா முன்னிலையில் கடந்த 30-ந் தேதி விசாரணைக்கு வந்தது.
                                                                                                    மேலும், . . .

நாமக்கல் அருகே பழுதாகி நின்ற லாரி மீது பஸ் மோதி 6 பேர் பலி 11 பேர் காயம்



நாமக்கல், அக்டோபர், 08-10-2014,
நாமக்கல் அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதியதில் பஸ்சில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
லாரி மீது பஸ் மோதல்
மதுரையில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் நேற்று அதிகாலை நாமக்கல் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் சேலம் நோக்கி புறப்பட்டது.
இந்த பஸ் புதன்சந்தை மேம்பாலத்தில் ஏற முயன்றபோது, அங்கு ஏற்கனவே பழுதாகி நின்று கொண்டிருந்த 110 அடி நீளம் கொண்ட டிரெய்லர் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
                                                                                                 மேலும், . . . . .

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கடையடைப்பு, வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை, அக்டோபர், 08-10-2014,
ஜெயலலிதா வழியில் வளர்ச்சி பணிகள் நடக்கின்றன என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கடையடைப்பு, வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆய்வு கூட்டம்
ஜெயலலிதாவின் தாரக மந்திரமான “அமைதி, வளம், வளர்ச்சி” என்பதற்கேற்ப தமிழ்நாடு அமைதியான சூழலில் வளர்ச்சிப்பாதையை நோக்கிச்சென்று கொண்டிருந்தாலும், தமிழ்நாடு அரசின் மீது களங்கம் கற்பித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்துவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் சிலர், சட்டம்-ஒழுங்கு குலைந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக விஷமப் பிரசாரம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
                                                                                                             மேலும், . . . .

தனிக்கோர்ட்டு சரியான தீர்ப்பு வழங்கி உள்ளது ஊழல் என்பது மனித உரிமை மீறிய செயல் ஐகோர்ட்டு தீர்ப்பு விவரம்

ஊழல் என்பது மனித உரிமை மீறிய செயல் என்றும், தனிக்கோர்ட்டு தீர்ப்பை சரியாக வழங்கி இருப்பதாகவும் ஐகோர்ட்டு நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்
தீர்ப்பு விவரம்
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சந்திரசேகர் தீர்ப்பு வழங்கினார். அவர் தனது உத்தரவில் கூறியதாவது:-
“1991-ம் ஆண்டில் இருந்து 1996-ம் ஆண்டு வரை தமிழ்நாடு முதல்-அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66½ கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை தனிக்கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் பிறகு சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டன.
ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகவும், எம்.பி.யாகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.
                                                                                                   மேலும், . . . .

No comments:

Post a Comment