Thursday 16 October 2014

இன்றைய முக்கிய செய்திகள் (17-10-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (17-10-2014) காலை, IST- 07.00 மணி, நிலவரப்படி,
 சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
புதுடெல்லி, அக்டோபர், 17-10-2014,
பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
பெங்களூர் சிறையில் ஜெயலலிதா
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது.
                                                                                                    மேலும், . . . . .

திருவள்ளூர் அருகே அமைச்சர் ரமணாவின் சகோதரர் கொலையில் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது ரியல் எஸ்டேட் தகராறில் தீர்த்துக்கட்டியது அம்பலம்


திருவள்ளூர், அக்டோபர், 17-10-2014,
திருவள்ளூர் அருகே, அமைச்சர் ரமணாவின் சகோதரர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஊராட்சி தலைவர் உள்பட 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
3 ஏக்கர் நிலம்
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பாலவிகார் ஓசூரம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் ரவி (வயது 38). இவர் அதே பகுதியில் இரும்பு கடை (ஹார்டுவேர்ஸ்) வைத்து வியாபாரம் செய்து வந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
தமிழக பால் வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணாவின் சித்தப்பா மகனான ரவி, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை அருகே உள்ள கந்தன்கொல்லை பூஜ்யன் கண்டிகையில் 3 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
மிரட்டல் கடிதம்
அந்த இடத்தை அவர் சீர் செய்ய சென்றபோது அப்பகுதியை சேர்ந்த சிலர், அந்த இடம் தொடர்பாக ரவியிடம் தகராறு செய்துள்ளனர்.
                                                                                                                   மேலும், . . . . 

விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் ஐரோப்பிய யூனியன் கோர்ட்டு தீர்ப்பு

லக்சம்பர்க், அக்டோபர், 17-10-2014,
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய யூனியன் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கம்
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
28 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய யூனியன் கடந்த 2006-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு 2011-ம் ஆண்டு மேற்கு ஐரோப்பாவின் லக்சம்பர்க் நாட்டில் உள்ள ஐரோப்பிய யூனியன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கு விசாரணை
இந்த வழக்கில் விடுதலைப்புலிகள் சார்பில் நெதர்லாந்துநாட்டைச் சேர்ந்த வக்கீல் விக்டர் கோப் ஆஜராகி வாதாடினார்.
                                                                                                      மேலும், . . . . . .

திருமுல்லைவாயலில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.80 லட்சம் மோசடி; தந்தை-மகன் கைது தலைமறைவான பெண்ணுக்கு போலீஸ் வலை

ஆவடி, அக்டோபர், 17-10-2014,
திருமுல்லைவாயலில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மாதாந்திர ஏலச்சீட்டு
திருமுல்லைவாயல் தென்றல்நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 33). கார் டிரைவர். இவர், திருமுல்லைவாயல் போலீசில் ஒரு புகார் செய்தார்.
அதில் அவர், “திருமுல்லைவாயல் தென்றல் நகர், கிழக்கு பட்டம்மாள் தெருவில் வசிக் கும் டக்ளாராம்(43), அவரது மனைவி பானிதேவி(40) ஆகியோரிடம் ரூ.3 லட்சத்துக்கு மாதாந்திர ஏலச்சீட்டு பணம் செலுத்தி வந்தேன்.
                                                                                மேலும், . . . . . 

No comments:

Post a Comment